மிந்திரா சார்பில் அமெரிக்கன் கார்டுகளை பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு 15 % தள்ளுபடியும், ஐசிஐசிஐ கார்டுகள் மீது 10% உடனடி தள்ளுபடியும் கிடைக்கின்றன.
ரூ.1,349க்கு விற்பனை செய்யப்படும் ஃபிட்ணஸ் இயர்போன்ஸ்!
ஃபிளிப்கார்ட் மற்றும் மிந்திரா ஆகிய நிறுவனங்கள் இணைந்து உடற்பயற்சி செய்ய உதவும் வகையில் ஒரு இயர்போன்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. 'பிளிங் பிளே' என பெயரிடப்பட்டுள்ள இந்த தயாரிப்பு இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.
விட்வர்க்ஸ் நிறுவனத்தை கை;gபற்றிய நிலையில் ஜபாங் மற்றும் மிந்திரா நிறுவனங்களின் ஆய்வுகூடத்தில் பல கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தற்போது இந்த இயர்போன் வெளியாகியுள்ளது. இந்த புளூடுத் இயர்போன்ஸ் 'பிளிங் பிட்' ஆப்புடன் இணைந்துகொண்டு பயனாளிகளுக்கு பயன்படும் விதத்தில் அமைந்திருக்கிறது. மேலும் இந்த இயர்போன்ஸ் கூகுள் உதவியாளர், சீரி போன்ற தொழிநுட்பங்களுடனும் இயங்குகிறது.
கார்பன் பிளாக், மூன் சில்வர், ரோஸ் கோல்டு, லையிம் ரிக் மற்றும் டான்ஜரின் போன்ற நிறங்களில் வெளியாகும் இந்த தயாரிப்பு ரூ.1,799-க்கு மிந்திராவிலும், ரூ.2,250-க்கு ஜபாங்கிலும் விற்பனை செய்யப்படுகிறது. ஜபாங் தளத்தில் தற்போது லையிம் ரிக் மற்றும் டான்ஜரின் நிறங்களில் வெளியாகுவதால் ரூ.1,349 வரை விற்பனை செய்யப்படுகிறது.
மிந்திரா சார்பில்அமெரிக்கன் கார்டுகளை பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு 15 % தள்ளுபடியும், ஐசிஐசிஐ கார்டுகள் மீது 10% உடனடி தள்ளுபடியும் கிடைக்கின்றன. மேலும் ஏர்டெல் பேமன்ட்ஸ் பேங்க், மொபிவிக் மற்றும் பேஸ் ஆப் போன்ற தள்ளுபடி ஆஃபர்களை அந்நிறுவனம் வழங்கவுள்ளது.
இந்த ஸ்மார்ட் இயர்போன்ஸ் உடற்கட்டமைப்புகாக உருவாக்கப்பட்டதால் இந்த இயர்போன்ஸ் எல்லாவித பயற்சிக்கும் உதவும் என பிளிங் பிளே நிறுவனம் கூறினது.
குவால்கேம் சிப்ஸ், உட்கட்டமைப்பு செய்யப்பட்ட மைக் மற்றும் கன்ட்ரோலுக்காக 3 பட்டன்களையும் தேர்வு செய்ய முடியும் என்பது கூடுதல் சிறப்பு.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Battlefield Redsec, Battlefield 6's Free-to-Play Battle Royale Mode, Arrives October 28