Photo Credit: Apple
Apple Watch Series 10 ஆப்பிள் நிறுவனத்தால் நடத்தப்பட்ட “Its Glowtime” வெளியீட்டு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 மாடலில் புதிய வைடு ஆங்கிள் OLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டிருக்கிறது. முந்தைய மாடலை விட 40% அதிக பிரைட்னஸுடன், ஸ்டாண்டர்டான ஆப்பிள் வாட்ச் சீரிஸிலேயே பெரிய டிஸ்பிளேவைக் கொண்ட மாடலாக வெளியாகியிருக்கிறது. மேலும் ஆப்பிள் நுண்ணறிவு அம்சங்களுடன் புதிய சிப்செட்டையும் கொண்டுள்ளது.
Apple Watch Series 10 GPS மாடல் ஆரம்ப விலை ரூ.46,900 என்கிற அளவில் தொடங்குகிறது. அதேசமயம் LTE விருப்பத்தின் விலை ரூ. 56,900 என உள்ளது. இதுவே டைட்டானியம் வேரியன்டின் விலை ரூ. 79,900 எனவும், 46mm விருப்பத்தின் மாடலின் விலை ரூ. 84,900 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்கூட்டிய ஆர்டர்கள் தொடங்கிவிட்டது. இது செப்டம்பர் 20 முதல் கடைகளில் விற்பனைக்கு வரும். இதற்கிடையில் Apple Watch Ultra 2 புதிய பிளாக் டைட்டானியம் மாடல் விலை ரூ. 89,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, இதுவும் முன்கூட்டிய ஆர்டர்கள் தொடங்கிவிட்டது. செப்டம்பர் 20 முதல் விற்பனைக்கு வரும்.
ஆப்பிளின் வெளியிட்ட தகவல் படி, Apple Watch Series 10 ஆனது புதிய வைட்-ஆங்கிள் OLED டிஸ்ப்ளே மற்றும் வட்டமான விளிம்பு பகுதிகளை கொண்டுள்ளது. இது செய்திகளையும், பாஸ்வோர்ட்களையும் டைப் செய்வதை எளிதாக்குகிறது. இது ஆப்பிள் வாட்ச் வரிசையில் மிகப்பெரிய திரையை கொண்டுள்ளது. முந்தைய மாடல்களை விட 40 சதவீதம் பிரகாசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
9.7 மிமீ Apple Watch Series 10 மெல்லிய ஆப்பிள் வாட்ச் என்றும் கூறுகிறது. இது சிலிகான் நானோ துகள்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பளபளப்பான அலுமினிய சட்டத்தைக் கொண்டுள்ளது. இதில் டைட்டானியம் ஆப்ஷனும் வெளியிடப்பட்டுள்ளது. இது துருப்பிடிக்காத ஸ்டீல் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. Apple 9 Watchகளை விட எடை குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
Apple Watch Series 10 ஆனது 30 சதவிகிதம் சிறியதாகக் கூறப்படுகிறது. நான்கு-கோர் நியூரல் எஞ்சினுடன் புதிய S10 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. பயனர்கள் இப்போது இன்பில்ட் ஸ்பீக்கரைப் பயன்படுத்தி தங்கள் ஸ்மார்ட்வாட்ச்சில் நேரடியாக இசை மற்றும் பாட்காஸ்ட்களை கேட்கலாம். 50மீ நீர் எதிர்ப்பை வழங்குகிறது. Apple Watch Series 10 வேகமான சார்ஜிங் ஸ்மார்ட்வாட்ச் என்று ஆப்பிள் கூறுகிறது. வெறும் 30 நிமிட சார்ஜிங்கில் 80 சதவிகிதம் சார்ஜ் அடையலாம்.
தூக்கத்தில் மூச்சுத்திணறல் கண்டறிதல் அம்சத்தை கொண்டுள்ளது. சுவாசக் கோளாறுகளை அளவிட முடியும். கூடுதலாக, ஸ்மார்ட்வாட்ச் தூக்கத்தில் அமைதியை சரிபார்க்கிறது. இயந்திர கற்றலைப் பயன்படுத்தி, ஆப்பிள் இந்தத் தரவை ஒவ்வொரு 30 நாட்களுக்கும் பகுப்பாய்வு செய்து, இந்தத் தரவை பயனருக்குக் காண்பிக்கும், அவர்களின் தூக்க சுழற்சியில் ஏதேனும் மாறுபாடு இருந்தால் அவர்களுக்குத் தெரிவிக்கும். இந்த வசதி 150 நாடுகளில் கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும் Apple Watch Series 10 முந்தைய மாடல்களை போல மருந்து நினைவூட்டல் மற்றும் ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் (AFib) விழிப்பூட்டல்கள் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்