வோடபோன் ஐடியாவின் டபுள் டேட்டா ஆஃபரின் மாற்றத்தைக் OnlyTech என்ற வலைப்பதிவு முதலில் கண்டறிந்தது.
வோடபோன் ஐடியா, வோடபோன் மற்றும் ஐடியா வாடிக்கையாளர்களுக்கான டபுள் டேட்டா ஆஃபரைக் கொண்டு வந்தது
Vodafone India தனது டபுள் டேட்டா ஆஃபரை 8 நகரங்களில் நிறுத்தியுள்ளது. இந்த ப்ளான், 22 தொலைத் தொடர்பு நகரத்திலிலுந்து 14 நகரங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
வோடபோன் மற்றும் ஐடியா, வாடிக்கையாளர்களுக்கு 28 நாட்கள் செல்லுபடியுடன் ரூ.249, 56 நாட்கள் செல்லுபடியுடன் ரூ.399 மற்றும் 84 நாட்கள் செல்லுபடி ரூ.599 ஆகிய மூன்று ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான்களை, தினசரி 1.5 ஜிபி டேட்டாவுடன் கொண்டுவந்தது. மூன்று ப்ளான்களும் தற்போது கூடுதலாக 1.5 ஜிபி டேட்டா பலன்கள் என்பதால், இது டபுள் டேட்டா ஆஃபர் என்று அழைக்கப்படுகிறது.
இந்த மூன்று ப்ளான்களும் Vodafone வாடிக்கையாளர்களுக்கு வோடபோன் ப்ளே மற்றும் ஜீ 5 சந்தாக்களுக்கான அணுகலை வழங்குகின்றன. Idea பயனர்கள், ஐடியா மூவிஸ் மற்றும் டிவி செயலியை அணுகலாம்.
ஆந்திரா, பீகார், குஜராத், கேரளா, மகாராஷ்டிரா மற்றும் கோவா, வடகிழக்கு, பஞ்சாப் மற்றும் உ.பி. மேற்கு ஆகிய நகரங்கள், வோடபோன் இந்தியா தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Vodafone Idea-வின் டபுள் டேட்டா ஆஃபரின் மாற்றத்தைக் OnlyTech என்ற வலைப்பதிவு முதலில் கண்டறிந்தது. வோடபோன் ஐடியா ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு டபுள் டேட்டா ஆஃபரை கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Andhra King Taluka OTT Release: When and Where to Watch Ram Pothineni’s Telugu Film