சமீப காலமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பக்கம் வாடிக்கையாளர்களை தொடர்ந்து ஈர்த்து வரும் நிலையில் இந்திய தொலைதொடர்பு ஓழுங்குமுறை ஆணைம் ட்ராய், ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.
அந்தத் தகவல்படி கடந்த டிசம்பர் மாதம் முதல் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களை அதிகமாக தன்வசப்படுத்தியதாகவும், மற்ற முன்னனி ஆப்ரேட்டர்களான ஏர்டெல், வோடபோன்-ஐடியா போன்ற நிறுவனங்கள் தொடர்சியாக வாடிக்கையாளர்களை இழந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
டிசம்பரில் ஜியோ நிறுவனம், சுமார் 85.6 லட்சம் வாடிக்கையாளர்கள் புதிதாக இணைத்துள்ளதாகவும், இதனால் அந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 28.01 கோடியாக உயர்ந்ததுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘மொத்த வயர்லெஸ் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த நவம்பர் 2018 போது 117.17 கோடி முதல் டிசம்பர் மாதம் 2018 க்குள் 117.6 கோடி வரை உயர்ந்துள்ளது. இதன் 0.36 சதவிகிதம் அதிகமாகும். மேலும் நகரங்களிளும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது' என இந்திய தொலைதொடர்பு ஓழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அதிகபடியான வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை கொண்ட நிறுவனமான வோடபோன்-ஐடியா சமீபத்தில் 23.32 லட்ச வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாகவும், ஏர்டெல் நிறுவனமும் தனது 15.01 லட்ச வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
‘கடந்த டிசம்பர் மாதம் சுமார் 4.76 மில்லியன் வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் எண்-ஐ போர்டபிலிட்டிக்காக கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்' எனவும் ட்ராய் அறிக்கை கூறுகிறிது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்