ஆப்பிள் நிறுவனத்தின் iOS 11.4 அப்டேட் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அப்டைட்டை ஐபேட், ஐபோன், ஐபாட் போன்ற டச் மாடல்களில் தரவிறக்கிக் கொள்ளலாம். இந்த அப்டேட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட AirPlay 2 வசதி கொடுக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த அப்டேட் குறித்து ஆப்பிள் நிறுவனம் தெரிவித்து வந்த நிலையில், தற்போது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த அப்டேட் மூலம் ஒரே நேரத்தில் பல அறைகளில் இருக்கும் ஆடியோ சிஸ்டங்களை நிர்வகிக்க முடியும். மேலும், இந்த அப்டேட் மூலம் iCloud-ல் செய்திகளை சேமித்து வைத்துக் கொள்ள முடியும். இது மட்டும் அல்லாமல், ஆப்பிள் நிறுவன சாதனங்களை இன்னும் மெறுகேற்றும் விதத்தில் பல விஷயங்கள் செய்யப்பட்டு உள்ளன.
ஐபோன் 5s அல்லது அதற்கு மேல் வந்த மாடல் ஸ்மார்ட் போன்களில் iOS 11.4 அப்டேட் செய்து கொள்ளலாம். அதேபோல, iPad Air, iPad mini 2 ஆகியவற்றிலும் இந்த அப்டேட்டை தரவிறக்கம் செய்ய முடியும்.
இந்த புதிய அப்டேட்டின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுவது AirPlay 2 வசதி தான். இந்த வசதி மூலம் வீட்டில் இருக்கும் அனைத்து ஆப்பிள் நிறுவன ஆடியோ சிஸ்டங்களையும் ஒரு சொடக்கில் கட்டுப்படுத்த முடியும். இதன் மூலம், வீட்டின் அனைத்து இடங்களிலும் ஒரே பாடலை ப்ளே செய்ய முடியும். ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்கு பாடல்களை மாற்றவும் முடியும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்