எப்போது நிகழ்கிறது 'சூரிய கிரகணம் 2019', எப்படி காணலாம்?

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
எப்போது நிகழ்கிறது 'சூரிய கிரகணம் 2019', எப்படி காணலாம்?

உலகின் அனைத்து இடங்களிலிருந்தும் இந்த கிரகணத்தை காண செயலி

ஜூலை 2 ஆம் தேதியன்று சூரிய கிரகணம் ஏற்படவுள்ளது. அமெரிக்க கிரகணத்திற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் களித்து ஏற்படும் சூரிய கிரகணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகளுக்குப்பின் நடக்கும் இந்த சூரிய கிரகணம் தென் அமெரிக்கா மற்றும் தெற்கு பசிபிக் பகுதிகளில் ஜூலை 2 அன்று தென்படவுள்ளது. மேலும், சிலி மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் இருந்தும் இந்த கிரகணத்தை காணலாம். அங்கு உள்ளவர்கள் மட்டும்தான் இந்த கிரகணத்தை காண முடியுமா, உலகின் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் இந்த கிரகணத்தை எப்படி காண்பது, எப்போது இந்த கிரகணம் நிகழப்போகிறது?

சூரிய கிரகணம் என்றால் என்ன?

சூரிய கிரகணம் என்பது சூரியன் மற்றும் புவிக்கு இடையே நிலவு சரியாக ஒரே நேர்க்கோட்டில் வரும் போது ஏற்படும் நிகழ்வு. 

'சூரிய கிரகணம் 2019' - எங்கெல்லாம் தென்படும்?

லா செரீனா, சிலி, அர்ஜென்டினா, புவெனஸ் அயர்ஸ் ஆகிய பகுதிகளில் முழுமையாகவும், உருகுவே, பராகுவே, எக்குவடோர், மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் பகுதியாகவும் தென்படும். இந்த தகவலை ஸ்பேஸ்.காம் (Space.com) வெளியிட்டுள்ளது.

எத்தனை மணிக்கு இந்த கிரகணம் துவங்கும்?

கிரீன்விச் சராசரி நேரப்படி இந்த கிரகணம் மாலை 06:24 மணிக்கு துவங்கும். இது இந்திய நேரப்படி இரவு 11:54 மணி என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் மற்ற இடங்களில் உள்ளவர்கள் இந்த கிரகணத்தை எப்படி காண்பது?

இந்த கிரகணத்தை காண நீங்கள் தென் அமெரிக்காவிற்கு பறந்த செல்ல தேவையில்லை. 

சான் பிரான்சிஸ்கோவின் எக்ஸ்ப்ளோரேட்டியம் அருங்காட்சியகம், சிலியிலுள்ள தேசிய அறிவியல் அறக்கட்டளையின் செரோ டோலோலோ ஆய்வகத்திலிருந்து, இந்த கிரகணத்தை இணையத்தில் நேரடியாக ஒளிப்பரப்பவுள்ளது. இதற்கென பிரத்யேகமாக ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் அமைப்புகளுக்கு பிரத்யேகமாக ஒரு செயலி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கு அடுத்த சூரிய கிரகணம், டிசம்பர் 14, 2020 அன்று நிகழும். இந்த கிரகணமும் சிலி, அர்ஜென்டினா ஆகிய பகுதிகளிலேயே தென்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
  1. விவோ ஒய் 70 எஸ் அறிமுகம்! விலை மற்றும் விவரங்கள்!
  2. பிஎஸ்என்எல் ஜூன் 20 வரை இலவச பிராட்பேண்ட் இணைப்பை வழங்குகிறது!
  3. சாம்சங் கேலக்ஸி ஏ 31 ஜூன் 4-ஆம் தேதி அறிமுகம்!
  4. குவாட் ரியர் கேமராக்களுடன் ரியல்மி எக்ஸ் 50 ப்ரோ பிளேயர் பதிப்பு அறிமுகம்!
  5. டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளேவுடன் ரியல்மியின் முதல் வாட்ச் அறிமுகம்!
  6. பிஎஸ்என்எல்-ன் புதிய ரூ.2,399 ப்ரீபெய்ட் ப்ளான் அறிமுகம்!
  7. அமேசான் மற்றும் எம்ஐ.காம் வழியாக விற்பனைக்கு வருகிறது ரெட்மி நோட் 9 ப்ரோ!
  8. ரியல்மி பட்ஸ் ஏர் நியோ இந்தியாவில் அறிமுகம்!
  9. ரியல்மியின் 10000 எம்ஏஎச் பவர் பேங் 2 அறிமுகம்! 
  10. ரியல்மியின் முதல் ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்! ஆரம்ப விலை ரூ.12,999 மட்டுமே!!
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com