ஆஸ்ட்ராய்டு ஏற்படுத்திய சிக்கல்... பரிதவிக்கும் நாசா!

ஆஸ்ட்ராய்டு ஏற்படுத்திய சிக்கல்... பரிதவிக்கும் நாசா!
ஹைலைட்ஸ்
  • பென்னு ஆஸ்ட்ராய்டுக்கு அருகில் சென்ற ஆக்ஸிரிஸ் – ரெக்ஸ் விண்கலம்!
  • நாசா ஆராச்சியில் தீடிர் சிக்கல்!
  • ஸ்ட்ராய்டின் மேற்புறம் எதிர்பார்த்தை விட கரடு முரடாக உள்ளதாக தகவல்!
விளம்பரம்

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, பென்னு என்கின்ற ஆஸ்ட்ராய்டு குறித்து ஆராய ஆக்ஸிரிஸ் – ரெக்ஸ் என்னும் விண்வெளி ப்ரோபை இரண்டு ஆண்டுகளுக்கு முன் விண்வெளிக்கு அனுப்பியது. 

அந்த ஆஸ்ட்ராய்டை ஆராய்வதில் தற்போது ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த ஆஸ்ட்ராய்டின் மேற்புறமே கற்களால் நிரம்பியுள்ளது. ஆஸ்ட்ராய்டின் மேற்புறம் எதிர்பார்த்ததை விட கரடு முரடாக உள்ளதாகவும் மிகவும் வலிமையாக இருப்பதால், அந்த ஆஸ்ட்ராய்டில் இருந்து சிறு துண்டை ஆராய்ச்சிக்கு எடுப்பதே தற்போது சவாலாக உள்ளது எனவும் நாசா தரப்பு கூறுகிறது. 

இது குறித்து பேசிய ஆராய்ச்சி தலைவர் டாண்டே லவ்ரிட்டா, ‘மறுபடியும் இந்த ஆராய்ச்சி குறித்து சிந்திக்க வேண்டியதுள்ளது' என்றுள்ளார்.

சூரியனை சுற்றும் அந்த ஆஸ்ட்ராய்டு, பூமியில் இருந்து 85 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அந்த ஆஸ்ட்ராய்டின் மேற்புறத்தில் இருந்து 60 கிராம் முதல் இரண்டு கிலோ கிராம் எடையிலான பொருட்களை எடுப்பதே இந்த ஆராய்ச்சியின் முக்கிய குறிக்கோளாக இருக்கிறது.

கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆக்ஸிரிஸ் – ரெக்ஸ் விண்வெளி ப்ரோப், தனது எல்லா கருவிகளையும் பயன்படுத்தி பென்னுவை மிக அருகில் இருந்து கண்காணித்து வந்தது. தற்போது பென்னுவிடமிருந்து சுமார் 3 மைல் தூரத்தில் இந்த விண்வெளி ப்ரோப் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆராய்ச்சிக்கான பொருட்களுடன் 2023 ஆம் ஆண்டில் பூமிக்கு வந்து சேரும் நாசா அனுப்பிய விண்வெளி ப்ரோப். பிற பெரிய விண்வெளிகளில் இருந்து விழுந்த பொருட்களால் ஆனதே இந்த பென்னு ஆஸ்ட்ராய்டு. அது 10 முதல் 150 மீட்டர் நீளத்தில் இருக்கும் பாகங்களை கொண்டுள்ளது.

மேலும் பென்னு ஆஸ்ட்ராய்டு தீடிரென தனது பாகங்களை மழைத் துளிபோல் பொழிய துவங்கிவிட்டது. இதனால் ஆராய்ச்சி கருவிகளுக்கு பாதிப்பு ஏதும் வராது என நாசா கூறுகிறது.
 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: NASA, Bennu, Asteroid
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »