ஒரு விண்கல் பூமியைத் தாக்கும், தப்பிக்க வழிகள் இல்லை - எச்சரிக்கும் Elon Musk!

விளம்பரம்
Written by Indo-Asian News Service மேம்படுத்தப்பட்டது: 21 ஆகஸ்ட் 2019 12:18 IST

Elon Musk: எச்சரிக்கும் எலோன் மஸ்க்!

ஒரு பெரிய விண்கல் மனிதகுலத்தைத் தாக்கும், அந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க நம்மிடம் எந்த வழிகளும் இருக்காது என்று ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் (Elon Musk) கணித்து கூறியுள்ளார்.

எகிப்திய வரலாற்றில் 'குழப்பங்களின் கடவுள்' (God of Chaos) என்று அழைக்கப்படும் அப்போபிஸ் (Apophis) என அந்த கடவுளின் பெயரால் பெயரிடப்பட்டுள்ள இந்த மிகப்பெரிய விண்கல் மிக அருகில் மிகவும் ஆபத்தான தொலைவில் இந்த பூமியை நெருங்கும், அதாவது பூமியின் நிலப்பரப்பிலிருந்து 19,000 மைல்கள் (31,000 கிலோமீட்டர்) தொலைவில் பூமியை நெருங்கும்.

"சிறந்த பெயர்! அது பற்றி இப்போது கவலைப்பட தேவையில்லை, ஆனால் ஒரு பெரிய விண்கல் இறுதியில் பூமியைத் தாக்கும் மற்றும் அந்த தாக்குதலில் இருந்து நம்மை காத்துக்கொள்ள நம்மிடம் எந்த பாதுகாப்பும் இல்லை" என்று மஸ்க் திங்களட்கிழமை ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.

ஏப்ரல் 13, 2029 அன்று, ஒரு ஒளி வெளிச்சம் வானம் முழுவதும் பரவி, பிரகாசமாகவும் வேகமாகவும் வரும்.

ஒரு கட்டத்தில் அது முழு நிலவின் அகலத்தை விட பெரிதாக காணப்படும், மேலும் ஒரு நிமிடத்திற்குள் அது நட்சத்திரங்களைப் போல பிரகாசமாக மாறிவிடும்.

ஆனால் அது ஒரு செயற்கைக்கோள் அல்லது விமானமாக இருக்காது - இது 1,100 அடி அகலமுள்ள, "அபோபிஸ்" என்று அழைக்கப்படும் பூமிக்கு மிக அருகில் பயணிக்கும் விண்கல்லாக இருக்கும், இது பூமிக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் பயணிக்கும்.

"2029 ஆம் ஆண்டில் அப்போபிஸின் நெருங்கிய அணுகுமுறை, அறிவியலுக்கு நம்பமுடியாத வாய்ப்பாக இருக்கும்" என்று கலிபோர்னியாவின் பசடேனாவில் உள்ள நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் (NASA's Jet Propulsion Laboratory) ரேடார் விஞ்ஞானி மெரினா ப்ரோசோவிக் (Marina Brozovic) கூறியுள்ளார், அவர் பூமிக்கு அருகிலுள்ள பொருட்களின் (NEOs) ரேடார் கண்கானிப்பு துறையில் பணியாற்றுகிறார்.

மேலும் பேசுகையில் "ஆப்டிகல் மற்றும் ரேடார் தொலைநோக்கிகள் மூலம் விண்கல்லை நாங்கள் கண்கானிப்போம். ரேடார் கண்கானிப்புகள் மூலம், சில மீட்டர் அளவிலான மேற்பரப்பு விவரங்களை நாம் காண முடியும்," என்று அவர் கூறினார்.

Advertisement

இந்த அளவிலான ஒரு விண்கல் பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்வது அரிது.

விஞ்ஞானிகள் 5-10 மீட்டர் வரிசையில், சிறிய விண்கற்களைக் கண்டறிந்தாலும், பூமியால் இதே தூரத்தில் பறக்கும், அபோபிஸின் அளவு விண்கற்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவு, எனவே இது பூமிக்கு அருகில் அடிக்கடி செல்ல கூடாது.

நகரும் நட்சத்திரம் போன்ற ஒளியின் புள்ளியைப் போல தோற்றமளிக்கும் இந்த விண்கல், தெற்கு அரைக்கோளத்தின் மீது இரவு வானத்தில் வெறும் கண்களுக்கே தென்படும். மேலும் இந்த விண்கல் கிழக்கு கடற்கரையிலிருந்து ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரை வரை பூமியின் மேலே பறக்கும். அது பின்னர் இந்தியப் பெருங்கடலைக் கடக்கும், கிழக்கு அமெரிக்காவில் பிற்பகலுக்குள், அது பூமத்திய ரேகை தாண்டி, மேற்கு நோக்கி, ஆப்பிரிக்காவிற்கு மேலே நகரும்.

Advertisement

"தற்போதைய கணக்கீடுகள் அப்போபிஸுக்கு இன்னும் பூமியை பாதிக்கும் ஒரு சிறிய வாய்ப்பு இருப்பதாகக் காட்டுகின்றன, அதன் இப்போது 100,000-த்திற்கு 1 என்பதற்கும் குறைவானதாக இருக்கிறது, ஆனால் அதன் நிலையின் எதிர்கால அளவீடுகள் சாத்தியமான பாதிப்புகளை நிராகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்" என்று நாசா சமீபத்தில் கூறியுள்ளது.

அப்போபிஸ் என்பது தற்போது அறியப்பட்ட சுமார் 2,000 அபாயகரமான விண்கற்களில்(PHAs) ஒன்றாகும்.

"சிறிய பனிச்சரிவுகள் போன்ற சில மேற்பரப்பு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது" என்று ஜேபிஎல்லின் (JPL) வானியலாளரான டேவிட் பார்னோச்சியா (Davide Farnocchia) வலைப்பதிவு ஓன்றில் குறிப்பிட்டுள்ளார்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Elon Musk, SpaceX, Apophis, NASA, JPL
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Oppo K13 Turbo: போனுக்குள்ள ஃபேனா? இந்தியால லான்ச் ஆன முதல் கூலிங் ஃபேனுடன் கூடிய ஸ்மார்ட்போன்
  2. Lava Blaze AMOLED 2 5G: ₹13,499-க்கு AMOLED டிஸ்ப்ளே, Dimensity 7060 ப்ராசஸரோட மிரட்டல் லான்ச்
  3. Tecno Spark Go 5G: ₹10,000-க்குள்ள இந்தியாவுலயே ஸ்லிம்மான 5G போன்! ஆகஸ்ட் 14-ல் வெளியீடு!
  4. Panasonic-ன் புது மிரட்டல் டிவி! MiniLED தொழில்நுட்பம், Dolby Atmos-உடன் வெளியீடு!
  5. Samsung Galaxy A17 5G: ₹17,500-க்கு ஒரு பெரிய பேட்டரி போன்! பட்ஜெட் மார்க்கெட்டில் ஒரு புதிய அஸ்திரம்!
  6. Lava-வின் புதிய அஸ்திரம்! Blaze AMOLED 2 5G லான்ச் தேதி உறுதி! AMOLED டிஸ்ப்ளே உடன் அதிரடி!
  7. Motorola Razr 60: போன்ல வைரங்கள் பதிக்கப்பட்டு வந்தாச்சு! அசத்தலான Brilliant Collection!
  8. Oppo K13 Turbo சீரிஸ்: போனுக்குள்ளயே ஃபேன் வச்சு மாஸ் காட்ட வர்றான்! இந்தியால ஆகஸ்ட் 11-ல் லான்ச்!
  9. Vivo Y400 5G லான்ச்! Snapdragon 4 Gen 2 SoC-வோட கலக்கப் போகுது!
  10. Amazon சேல்ல லேப்டாப் வாங்க இதுதான் சரியான நேரம்! ரூ. 60,000-க்குள்ள டாப் பிராண்டுகளின் மாஸ் டீல்ஸ்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.