Elon Musk-இன் Starlink நிறுவனம், இந்தியாவில் அதன் அதிவேக செயற்கைக்கோள் இணைய சேவைக்கான விலைகள் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
Photo Credit: Starlink
Starlink இந்திய விலை தீர்மானிக்கப்படவில்லை; சேவையின் சட்ட நடைமுறை இன்னும் நடப்பில்
நம்ம Elon Musk-இன் Starlink நிறுவனம், இந்தியாவுக்கு அதிவேக செயற்கைக்கோள் இணைய சேவை (Satellite Internet Service)-ஐ கொண்டு வரப்போறாங்கன்னு தெரிஞ்சதும், டெக் உலகமே செம்ம ஹாட் ஆகிடுச்சு! ஆனா, இந்த சேவைக்கான விலை என்னவா இருக்கும் அப்படின்னு சமூக வலைத்தளங்கள்ல பல வதந்திகள் பரவ ஆரம்பிச்சது. சில இணையதளங்கள்ல, மாதாந்திர சந்தா ₹4,000 அல்லது ₹6,000 இருக்கும்னு கூட தகவல்கள் கசிஞ்சது. ஆனா இப்போ, இந்த எல்லா வதந்திகளுக்கும் Starlink நிறுவனம் ஒரு முற்றுப்புள்ளி வச்சிருக்காங்க. Starlink கம்பெனி, அதிகாரப்பூர்வமா என்ன சொல்லியிருக்காங்கன்னா, "இந்தியாவில் எங்களுடைய சேவைக்கான விலை மற்றும் பேக்கேஜ்கள் எதுவும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை! இணையத்தில் பரவும் எந்தவொரு விலையும் உண்மையானது அல்ல!" அப்படின்னு தெளிவா சொல்லியிருக்காங்க. இது, இந்த சேவைக்காக காத்திருக்கிற நிறைய யூஸர்களுக்கு ஒரு முக்கியமான அப்டேட்!
Starlink நிறுவனம், இந்தியாவுல தன்னோட சேவையை முழுசா தொடங்கணும்னா, இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து (Department of Telecommunications - DoT) இறுதி உரிமம் மற்றும் ஒப்புதலைப் பெற வேண்டியது இருக்கு. இந்த சட்டரீதியான நடைமுறைகள் இன்னும் முடிவடையாததால, அவங்க இப்போதைக்கு எந்த விலையையும் கன்ஃபார்ம் பண்ண முடியாது. இந்த உரிமம் மற்றும் ஒப்புதல் கிடைத்த பின்னர்தான், இந்திய மார்க்கெட்டுக்கு ஏத்த மாதிரி ஒரு சரியான விலையை அவங்க நிர்ணயம் செய்வாங்க.
இந்தியாவுல நிறைய கிராமப்புறங்கள்லயும், மலைப் பிரதேசங்கள்லயும், ஃபைபர் ஆப்டிக் (Fiber Optic) இன்டர்நெட் அல்லது சாதாரண மொபைல் நெட்வொர்க் சிக்னல் கிடைக்காத இடங்கள்ல, இந்த செயற்கைக்கோள் இணைய சேவை ரொம்பவே உதவியா இருக்கும். எங்க நெட்வொர்க் இல்லையோ, அங்கேயும் அதிவேக இன்டர்நெட் கொடுக்குறதுதான் Starlink-இன் நோக்கம்.
ஆனா, இந்த சேவைக்கான உபகரணங்களின் விலையும் (Dish Antenna, Router) ரொம்ப அதிகமா இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது. இதுவும் ஒட்டுமொத்த விலையை நிர்ணயம் செய்றதுல ஒரு முக்கிய பங்கு வகிக்கும்.
இந்தியாவுல Starlink விலை, மத்த நாடுகள்ல இருக்கிற விலையோட ஒப்பிடும்போது, கொஞ்சம் குறைவா (Affordable-ஆ) இருக்கணும்னு எதிர்பார்ப்பு இருக்கு. காரணம், இந்தியாவில் இருக்கிற அதிக போட்டி மற்றும் மக்கள் பட்ஜெட்-ஐப் பார்க்கிற விதம்.
Starlink-இன் இந்த விளக்கத்தை வச்சுப் பார்க்கும்போது, இந்த சேவைக்கான விலை மற்றும் லான்ச் தேதி பத்தின சரியான அறிவிப்பு, இன்னும் கொஞ்ச நாள் கழிச்சுத்தான் வரும்னு எதிர்பார்க்கலாம். அதுவரைக்கும் வதந்திகளை நம்ப வேண்டாம். Starlink-க்காக நீங்க மாசம் எவ்வளவு வரைக்கும் செலவு பண்ணத் தயாரா இருக்கீங்கன்னு கமெண்ட்ஸ்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Lenovo Yoga Slim 7x, IdeaPad 5x 2-in-1, IdeaPad Slim 5x With Snapdragon X2 Chips to Launch at CES 2026: Report
TCL Note A1 Nxtpaper E-Note Launched With 8,000mAh Battery, 11.5-Inch Display: Price, Specifications