நாவல் கொரோனா வைரஸின் அச்சுறுத்தலுக்கு மத்தியில், சீனா தனது ஷாங்காய் தொழிற்சாலையை தற்காலிகமாக மூடுமாறு டெஸ்லாவிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இது 2020 முதல் காலாண்டில் Elon Musk-led மின்சார கார் நிறுவனத்தின் லாபத்தை "சற்று" பாதிக்கக்கூடும் என்று உயர்மட்ட நிறுவன நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். முதலீட்டாளர்களுடனான அழைப்பில், ஷாங்காய் தொழிற்சாலை மூடப்படுவது நிறுவனத்தின் Model 3 உற்பத்தியை தாமதப்படுத்தும் என்று நிர்வாகிகள் அறிவித்தனர் என்று, தி வெர்ஜ் (The Verge) புதன்கிழமை செய்தி வெளியிட்டது.
சீன அரசாங்கத்தின் உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள பல நிறுவனங்களில் Tesla-வும் ஒன்றாகும். இது பிப்ரவரி 9 வரை மூடப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.
"இந்த கட்டத்தில், அரசாங்கத்திற்குத் தேவையான தொழிற்சாலை பணிநிறுத்தம் காரணமாக ஷாங்காய் உருவாக்கப்பட்ட Model 3s, ஒன்று முதல் ஒன்றரை வாரங்கள் தாமதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று டெஸ்லா நிதித் தலைவர் சாக் கிர்கோர்ன் (Zach Kirkhorn) அழைப்பில் குறிப்பிட்டுள்ளார்.
எலக்ட்ரிக் கார் தயாரிப்பாளர் கடந்த ஆண்டு இறுதியில் தனது ஷாங்காய் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் வாகனங்களை வழங்கத் தொடங்கினார்.
மின்சார வாகனங்களுக்கான நாட்டின் வளர்ந்து வரும் சந்தையில் ஒரு இடத்தை பெறும் என்ற நம்பிக்கையுடன் டெஸ்லா சீனாவில் உற்பத்தியைத் தொடங்கியது.
ஆனால், புதிய கொரோனா வைரஸின் பாதிப்பு அதன் சில திட்டங்களை பாதிக்கக்கூடும். டெஸ்லா 2019-ஆம் ஆண்டில் 24.6 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியிருந்தாலும், நான்காம் காலாண்டில் சுமார் 7.4 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது.
2019-ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில், நிறுவனம் 105 மில்லியன் டாலர் லாபத்தைப் பதிவுசெய்தது. இந்த ஆண்டை லாபகரமான காலாண்டுகளுடன் முடித்தது.
சீனாவில் தோன்றிய புதிய கொரோனா வைரஸ், கூகுள் உட்பட பல நிறுவனங்களையும் பாதித்துள்ளது. இது புதன்கிழமை தனது அனைத்து சீன அலுவலகங்களையும் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்