Elon Musk-இன் X தளத்தில், Grok AI-ன் உதவியுடன் 'Following' Feed போஸ்ட்கள் இனி காலவரிசைப்படி இல்லாமல், AI மூலம் தரவரிசைப்படுத்தப்படும்
Photo Credit: Reuters
Grok AI: 'Following' feed-ல் உள்ளடக்கக் கண்டறிதலை மேம்படுத்துகிறது
நம்ம Elon Musk இருக்காரே, ஒரு இடத்துல சும்மா இருக்கவே மாட்டார்! அடிக்கடி X (முன்னாள் ட்விட்டர்)-ல புதுசு புதுசா ஏதாவது பண்ணிட்டே இருப்பாரு. இப்போ வந்திருக்கிற ஒரு பெரிய அப்டேட் என்னன்னா, X தளத்துல இருக்குற Following Feed-ல வர்ற போஸ்ட்டுகளை இனிமேல் Grok AI தான் வரிசைப்படுத்தப் போகுது!
பொதுவா, X-ல ரெண்டு வகையான ஃபீட் (Feed) இருக்கும். ஒண்ணு 'For You' Feed, இன்னொன்னு 'Following' Feed. 'For You' Feed-ல AI பயன்படுத்தி, உங்களுக்குப் பிடிச்ச போஸ்ட்களைக் காட்டுவாங்க. ஆனா, 'Following' Feed-ல நீங்க பின்தொடரும் (Follow) நண்பர்கள் போடும் போஸ்ட்டுகள், காலவரிசைப்படி (Chronological Order) தான் இதுவரைக்கும் வரும். இப்போ அந்த சிஸ்டமை Musk மாத்திட்டார்.
இனிமேல், உங்க 'Following' Feed-ல போஸ்ட்டுகள் வெறுமனே நேரத்தை வச்சு வரிசைப்படுத்தப்படாது. அதுக்கு பதிலா, Grok AI களத்தில் இறங்கிருக்கு! இந்த Grok AI என்ன பண்ணும்னா, நீங்க யாரையெல்லாம் ஃபாலோ பண்றீங்க, கடந்த காலத்துல எந்த மாதிரியான போஸ்ட்களுக்கு அதிகமா ரெஸ்பான்ஸ் பண்ணிருக்கீங்க (லைக், கமெண்ட்), எந்த மாதிரியான கன்டென்ட் உங்களுக்கு ரொம்ப பொருத்தமானதுன்னு (Relevant) எல்லாத்தையும் அனலைஸ் பண்ணும்.
இந்த அனலைஸ் முடிவை வச்சு, நீங்க ஃபாலோ பண்றவங்க போட்டிருந்தாலும், உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச, மற்றும் சுவாரசியமான போஸ்ட்டுகளை முதல்ல கொண்டு வந்து காட்டப் போகுது Grok AI. Musk அவருடைய X போஸ்ட்லயே, "புதுசா அப்டேட் பண்ணி பாருங்க! உங்க Following Feed-ல வர்ற போஸ்ட்டுகளை Grok தான் ரேங்க் பண்ணும்"னு சொல்லிருக்காரு.
அதாவது, நீங்க மிஸ் பண்ணவே கூடாத முக்கியமான போஸ்ட்டுகளை இனிமேல் Grok AI ஸ்கேன் பண்ணி முன்னாடி கொண்டு வந்து நிறுத்தும். ஆனா, இந்த மாற்றம் சில பேருக்குப் பிடிக்காம போகலாம். ஏன்னா, அவங்களுக்கு காலவரிசைப்படி போஸ்ட்டுகளைப் பார்க்குறதுதான் பிடிக்கும். கவலை வேண்டாம்! Musk அவர்களே, "நீங்க விரும்பினா, ஃபில்டர் பண்ணாத, காலவரிசைப்படியான ஃபீட்க்கு (Unfiltered Chronological Feed) மறுபடியும் மாறிக்கலாம்"னு சொல்லி, ஒரு ஆப்ஷனையும் கொடுத்திருக்காரு.
இன்னொரு முக்கியமான அப்டேட் என்னன்னா, X Premium சப்ஸ்கிரிப்ஷன் விலையை இந்தியால தற்காலிகமா குறைச்சிருக்காங்க! இந்த சப்ஸ்கிரிப்ஷன் லான்ச் ஆகி மூணு வருஷம் ஆகுறத கொண்டாடுற விதமா, ஒரு மாசத்துக்கு ₹427 இருந்த Premium பிளான் விலையை, முதல் மாசத்துக்கு வெறும் ₹89-ஆ குறைச்சிருக்காங்க! அதே மாதிரி, Premium+ பிளான் விலையும் ₹2,570-ல இருந்து ₹890-ஆ குறைஞ்சிருக்கு! இந்த ஆஃபர் டிசம்பர் 2 வரைக்கும்தான் இருக்குன்னு சொல்லிருக்காங்க. இந்த Grok AI ரேங்கிங் மற்றும் X Premium விலை குறைப்பு பத்தி உங்க கருத்து என்னன்னு கமெண்ட்ஸ்ல சொல்லுங்க
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்