கடந்த வாரம் ரிவேர்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எமி நெல்சன் எழுதிய கட்டுரை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையில் வெளியானது. அதில், தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் நேர்காணலில், பிரபல தொழிலதிபர் எலன் மஸ்க் அழுதார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், நேர்காணல் போன்ற பொது நிகழ்ச்சிகளில் முன்னனி தொழிலதிபர் ஒருவர் கண்ணீர் வடிப்பது சரியல்ல என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டிருந்தது.
ட்விட்டரில் பகிரப்பட்ட இந்த கட்டுரை சமூக வலைத்தளத்தில் வைரலானது. அதனை தொடர்ந்து, உலகப் புகழ்பெற்ற எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான எலன் மஸ்க், இந்த சர்ச்சைக்கு பதில் அளித்துள்ளார்
“நேர்காணலின் போது, என்னுடைய பேச்சில் தடுமாற்றம் ஏற்பட்டது உண்மை. ஆனால், நான் அழவில்லை” என்று உறுதியாக தெரிவித்துள்ளார். இதற்கிடையில், டெஸ்லா நிறுவத்தின் தயாரிப்பில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், டெஸ்லாவை நிர்வகிப்பது எலன் மஸ்க்கிற்கு சவாலாக உள்ளது குறிப்பிடத்தக்கது
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்