அட Samsung Galaxy Flip 6 செல்போனை அப்படியே மடிக்கலாமா?

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 1 ஜூலை 2024 13:06 IST
ஹைலைட்ஸ்
  • சாம்சங் நிறுவனத்தின் மிகவும் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்
  • சிறந்த கிராபிக்ஸ் அனுபவம் பெற Adreno 750 GPU தரப்பட்டுள்ளது
  • சாம்சங் நிறுவனத்தின் மிகவும் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்

Photo Credit: Tomsguide

சாம்சங் நிறுவனம் தரப்பில் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் புதிய தலைமுறை செல்போன்களான மடிக்க கூடிய FLIP சீரியஸ் மீண்டும் அப்டேட் செய்து அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இன்னும் சில வாரங்களில் Samsung Galaxy Flip 6 சீரியஸ் செல்போன்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இது டாப் கிளாஸ் குளவாலிட்டி உடைய ஹார்டுவேர் சிப்கள் சேர்க்கப்பட்டு இதுவரை மார்க்கெட்டில் உள்ள சாம்சங் செல்போன்களில் அதிக விலை உடைய செல்போனாக வர இருக்கிறது.

நமக்கு கிடைத்த தகவல்களின்படி, அடுத்த கேலக்ஸி அன்பேக்ட் நிகழ்வில் Samsung Galaxy Flip 6 வெளியிடப்படும். இந்த நிகழ்வு ஜூலை 10, 2024 அன்று பாரிஸில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு வரை சாம்சங் மட்டுமே மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கண்டுபிடிப்புகளை வெளியிட்டு வந்த நிலையில், இப்போது ஒன்பிளஸ் , ஒப்போ ,ஹானர் போன்ற சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் போட்டிக்கு வந்துவிட்டது. இதை சமாளிக்க வரவிருக்கும் Samsung Galaxy Z Flip 6 சீரியஸ் அதிக அம்சங்கள் மற்றும் புதுமையான பல அப்டேட்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக  6 ஆறு வெவ்வேறு வண்ணங்களில் வரக்கூடும் என தெரிகிறது. Galaxy Z Flip 6 ஆனது 120Hz புதுப்பிப்பு வேகம் இருக்கும். 7.6 இன்ச் FHD+ தெளிவுத்திறன் கொண்ட டிஸ்பிளே இருக்கும். Galaxy Z Flip 5 உடன் ஒப்பிடும் போது அதிக பிரகாசத்துடன் இருக்கலாம். Snapdragon 8 Gen 3 பிராசஸர் இருப்பதால் மிக வேகமாக இயங்க கூடியதாக இருக்கும். குறைந்தது 12 ஜிபி RAM மற்றும் 256 ஜிபி சேமிப்பகத்தை வழங்க வாய்ப்புள்ளது. டாப் மாடல்களில் 16 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி சேமிப்பகம் இருக்கலாம். 4,400 mAh பேட்டரி பவருடன் இருக்கும். IPX8 தர மதிப்பை பெற்று இருப்பதால் தண்ணீரில் பட்டால் எதுவும் ஆகாது என தெரியவருகிறது.

50 MP வைட்-ஆங்கிள் கேமரா, 12 MP அல்ட்ரா-வைட் கேமரா, மற்றும் 10 MP 3x டெலிஃபோட்டோ லென்ஸ், டிஸ்ப்ளேவில் மற்றொரு 10 எம்பி செல்ஃபி கேமரா இருக்கலாம். இயங்குதளத்தை பொருத்தவரையில் Galaxy AI அம்சங்களுடன் Android 14 அடிப்படையிலான OneUI 6.1 இருக்கும். Galaxy S24 தொடரைப் போலவே ஏழு ஆண்டுகள் வரை சாப்ட்வேர் சப்போர்ட் இருக்கும்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Mobile phone, Samsung Mobile, Samsung Galaxy Flip 6, Samsung Flip

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Sony LYT-901 வந்துருச்சு! 200 மெகாபிக்ஸல்... இனி போட்டோஸ் வேற லெவல்
  2. OnePlus-ன் Performance King! Ace 6T லான்ச் தேதி கன்ஃபார்ம்! 8000mAh பேட்டரி, 165Hz டிஸ்ப்ளேன்னு செம பவர்
  3. 7000mAh பேட்டரி, 144Hz டிஸ்பிளே! Realme P4x வருது டிசம்பர் 4-ஆம் தேதி! காத்திருங்கள்
  4. WhatsApp-ல் உங்களுக்குப் பிடிச்ச AI Bot-க்கு டாட்டா! Meta AI மட்டும்தான் இனி உள்ளே வர முடியும்
  5. Xiaomi 17 Ultra டெலிஃபோட்டோ லென்ஸ் மட்டும் 200MP! DSLR-ஐ ஓரங்கட்டப் போற Xiaomi-யின் அடுத்த பிளான்
  6. POCO C85 5G: Dimensity 6100+, ஃப்ரண்ட் டிசைன் லீக் - இந்தியா வருகை உறுதி!
  7. சார்ஜ் பத்தி கவலையே வேணாம்! OnePlus Ace 6 Turbo-வில் 9,000mAh பேட்டரி! Snapdragon 8s Gen 4 பவர் வேற!
  8. Nord 4 யூசர்ஸ் கொண்டாடுங்க! OxygenOS 16 அப்டேட் வழியா AI மோட், புது Widget-கள், செம கஸ்டமைசேஷன் ஆப்ஷன்ஸ் கிடைச்சுருக்கு
  9. Google Circle to Search-ல இப்படி ஒரு பவர் கிடைச்சுருக்கு! AI மோட் மூலமா இனி நீங்க கேட்குற எல்லா கேள்விக்கும் டக்குனு பதில்!
  10. வருத்தம் தரும் செய்தி! நம்ம டெய்லி Chat-க்கு ஹெல்ப் பண்ண Microsoft Copilot AI, வாட்ஸ்அப்-ல இருந்து விலகுறாங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.