இதன் முன்புறத்தில் இரு கேமிராவும், பின்புறத்தில் இரு கேமிராவும் உள்ளன. ரெட்மி நோட் 6 ப்ரோவில் 12 மெகா பிக்சல் பிரைமரி சென்சார் மற்றும் 5 மெகா பிக்சல் செகண்டரி சென்சாரைக் கொண்டுள்ளது
முன்புறம் இரு கேமிராவும், பின்புறம் இரு கேமிராவும் கொண்டிருக்கும் முதல் ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 6 ப்ரோ.
சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ இந்தியாவில் வரும் வியாழனன்று அறிமுகமாக உள்ளது. இந்த வருடத்தின் தொடக்கத்தில் வெளியான ரெட்மி நோட் 5 ப்ரோவின் வாரிசாக நோட் 6 ப்ரோ வர இருக்கிறது. ரெட்மி நோட் 6 ப்ரோ அதன் டிசைன் மற்றும் முக்கியம்சங்களில் மாறுதல்களை செய்துள்ளது. சியோமி கேமிரா செட் அப்பில் முக்கியமான மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளது. சியோமி நிறுவனத்தின் 4 கேமிராக்களுடன் அறிமுகம் முதல் ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 6 ப்ரோ ஆகும்.
இதன் முன்புறத்தில் இரு கேமிராவும், பின்புறத்தில் இரு கேமிராவும் உள்ளன. ரெட்மி நோட் 6 ப்ரோவில் 12 மெகா பிக்சல் பிரைமரி சென்சார் மற்றும் 5 மெகா பிக்சல் செகண்டரி சென்சாரைக் கொண்டுள்ளது. மாறுபட்ட வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோவில் எடுக்கப்பட்ட, படத்தினைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
இந்தியாவில், ரெட்மி நோட் 6 ப்ரோவின் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதன்விலை ரூ. 15,000 - ரூ.20,000 வரை இருக்குமென்று கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்த தகவல்களை வரும் வியாழனன்று தெரியவருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி நோட் 6 ப்ரோ ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவினை அடிப்படையாகக் கொண்ட MIUI 10ல் இயங்குகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Vivo S50 Series Tipped to Launch Next Month With a Snapdragon Chip