ஷாவ்மி ரெட்மி நோட் 9 சீரிஸின் மற்றொரு ஸ்மார்ட்போனுக்கு தயாராகுங்கள்!

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
ஷாவ்மி ரெட்மி நோட் 9 சீரிஸின் மற்றொரு ஸ்மார்ட்போனுக்கு தயாராகுங்கள்!

Photo Credit: Twitter/ Xiaomi

ரெட்மி நோட் 9 சீனாவில் ரெட்மி 10 எக்ஸ் என அறிமுகப்படுத்தப்படும் என்று நம்பப்படுகிறது

ஹைலைட்ஸ்
  • ரெட்மி நோட் 9 சீரிஸ் நிகழ்வு, டீஸர் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
  • இந்தத் சீரிஸில் ஏற்கனவே மூன்று தனித்துவமான மாடல்கள் உள்ளன
  • ரெட்மி நோட் 9 ஆரம்பத்தில் கடந்த மாதம் தொடங்கப்படும் என்று யூகிக்கப்பட்டது
விளம்பரம்

ஏப்ரல் 30-ஆம் தேதி Redmi Note 9 சீரிஸில் புதிய ஸ்மார்ட்போன் சேர்க்கப்பட உள்ளது. இந்த சீரிஸில் நிறுவனம் ஒரு புதிய ஸ்மார்ட்போனை சேர்க்கப் போவதாக ஷாவ்மி சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளது.

சீன நிறுவனத்திடமிருந்து இந்த புதிய ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 9 ஆக இருக்கலாம். இது கடந்த மாதம் Redmi Note 9 Pro மற்றும் Redmi Note 9 Pro Max உடன் அறிமுகப்படுத்தப்படும் என்று யூகிக்கப்பட்ட நிலையில், அப்போது அறிவிக்கப்படவில்லை. சமீபத்தில், ஷாவ்மி தனது ரெட்மி நோட் 9 எஸ்-ஐ அறிமுகப்படுத்தியதன் மூலம் ரெட்மி நோட் 9 சீரிஸை நீட்டித்தது, இப்போது நிறுவனம் இந்த சீரிஸை மீண்டும் நீட்டிக்க உள்ளது.

ட்விட்டரில் வெளியிடப்பட்ட டீஸர் புகைப்படத்தின்படி, Xiaomi தனது புதிய ரெட்மி நோட் 9-சீரிஸ் போனை ஏப்ரல் 30-ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. நிறுவனம் இரவு 8 மணிக்கு GMT + (இந்திய நேரப்படி மாலை 5:30-க்கு) போனை அறிமுகப்படுத்தும். வெளியீடு ஒரு ஆன்லைன் நிகழ்வாக இருக்கும். மேலும் இது ட்விட்டர் மற்றும் யூடியூபில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

அதிகாரப்பூர்வ டீஸர், போனைப் பற்றிய எந்த தகவலையும் வழங்கவில்லை, ஆனால் அதில் உள்ள "9" ரெட்மி நோட் 9-ஐக் குறிக்கிறது.

Play Video

புதிய ஷாவ்மி ரெட்மி நோட் 9-ஐ சீனாவில் Redmi 10X என அறிமுகப்படுத்தக்கூடும் என்றும் சில சமீபத்திய தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன. மேலும், இந்த போன் கடந்த வாரம் மாடல் எண் M2003J15SC உடன் TENAA-வின் தரவுத்தளத்தில் காணப்பட்டது. 

புதிய ரெட்மி போன், குவாட் ரியர் கேமரா அமைப்பு மற்றும் ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே டிசைனுடன் வரும் என்று TENAA பட்டியலில் தெரியவந்துள்ளது. மேலும், ரெட்மி 10 எக்ஸ், China Telecom போர்ட்டலில் ஸ்கை ப்ளூ, பைன் மார்னிங் கிரீன் மற்றும் ஐஸ் ஃபாக் ஒயிட் உள்ளிட்ட மூன்று வெவ்வேறு கலர் ஆப்ஷன்களில் காணப்பட்டுள்ளது.


Is iPhone SE the ultimate 'affordable' iPhone for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good battery life
  • Powerful processor
  • Decent daylight camera performance
  • Bad
  • Average low-light camera performance
  • Bloated UI and spammy notifications
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Redmi Note 9 price, Redmi Note 9 specifications, Redmi Note 9, Redmi, Xiaomi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »