ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் இந்தியாவில் இன்று நண்பகல் முதல் மீண்டும் ஒரு பிளாஷ் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த போன் மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, இப்போது பல ஃபிளாஷ் விற்பனைகளுக்கு பின்னர் இது மீண்டும் அமேசான் மற்றும் சியோமி இந்தியா தளங்களின் வழியாக விற்பனைக்கு வந்துள்ளது. ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் குவாட் ரியர் கேமராக்கள், 32 மெகாபிக்சல் முன் கேமரா மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி சோசி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வேகமான சார்ஜிங் ஆதரவையும் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் 6ஜிபி + 64ஜிபி வேரியண்டின் விலை ரூ.16,999 ஆகும். 6ஜிபி ரேம்/128ஜிபி வேரியண்ட் மாடலின் விலை ரூ.18,499 ஆகும். இரண்டு வகைகளும் அமேசான்.இன் மற்றும் எம்ஐ தளத்தில் விற்பனையில் உள்ளன.
ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸின் 8ஜிபி ரேம்/128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டையும் வாடிக்கையாளர்கள் எம்.ஐ தளத்தில் ரூ.19,999ல் பெற்றுக்கொள்ளலாம்.
இதில், ஏர்டெல் டபுள் டேட்டா பலனாக ரூ.298 மற்றும் ரூ.398 மதிப்பிலான அன்லிமிடெட் பேக்குகள் ஆஃபராக வழங்கப்பட்டுள்ளது. அமேசான் வழியாக போனை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் விலையில்லா இஎம்ஐ ஆப்ஷன்களையும் தேர்ந்தெடுக்கலாம்.
ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் 6.67 அங்குல முழு எச்டி+(1,080x2,400பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி SoCல் இயக்கப்படுகிறது, இதில் 8ஜிபி ரேம் வரை இணைக்கப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்.டி கார்டு (512 ஜிபி வரை) வழியாக விரிவாக்கக்கூடிய 128ஜிபி உள் சேமிப்பிடத்தையும் இந்த போன் கொண்டுள்ளது.
ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸில் குவாட் ரியர் கேமரா அமைப்பில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸுடன் 8 மெகாபிக்சல்சென்சார், மேக்ரோ லென்ஸுடன் 5 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் ஆகியவை உள்ளன. செல்பி மற்றும் வீடியோ அழைப்பிற்காக, சியோமி துணை பிராண்ட் ரெட்மி 32 மெகாபிக்சல் முன் கேமராவை வழங்கியுள்ளது.
பேட்டரியைப் பொறுத்தவரை, ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் 5,020 எம்ஏஎச் உடன் 33W வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவைக் கொண்டுள்ளது. இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சாருடன் வருகிறது. தொலைபேசியில் இணைப்பு விருப்பங்களில் 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.0, அகச்சிவப்பு (ஐஆர்), யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.
Is Redmi Note 9 Pro Max the best affordable camera phone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்