4ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை 11,999 ரூபாய் என்றும், 4ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை 13,499 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
வரும் ஜூலை 24 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது.
ரெட்மி பிரியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை, சிறப்பம்சங்கள், சிறப்பு சலுகைகள் உள்ளிட்ட முழு விவரங்களையும் இங்கு பார்ப்போம்.
ரெட்மி நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில், இந்தாண்டு ரெட்மி 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. ஏப்ரல் மாதம் ரெட்மி நோட் 9 ப்ரோ, ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஆகிய இரு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது ரெட்மி நிறுவனம். ஆனால், பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான ரெட்மி நோட் 9 மாடலை அறிமுகம் செய்யாமலே வைத்திருந்தனர். இதனால், இந்த ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகரித்தது.
இந்த நிலையில், இன்று (ஜூலை 20) ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கவர்ச்சிகர தோற்றத்துடன், பின்புறத்தில் நான்கு கேமராக்களுடன், முன்புறத்தில் பஞ்ச் ஹோல் டிஸ்பிளேவுடன் அட்டகாசமாக களம் இறங்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
விலை:
ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் மொத்தம் மூன்று வேரியண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 4ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை 11,999 ரூபாய் என்றும், 4ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை 13,499 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, 6ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை 14,999 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எப்போது விற்பனைக்கு வரும்?
வரும் ஜூலை 24 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. வாடிக்கையாளர்கள் இதனை mi.com, அமேசான், Mi ஹோம் ஸ்டோர்ஸ் ஆகியவற்றில் வாங்கிக் கொள்ளலாம்.
ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனில் உள்ள சிறப்பம்சங்கள்:
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
திரை அளவு: 6.53 இன்ச்
ப்ரொடக்ஷன்: கார்னிங் கொரிலா கிளாஸ் 5
பிராசசர்: மீடியாடெக் ஹூலியோ G85 SoC
கேமரா:
செல்ஃபி கேமரா: 13 மெகா பிக்சல்
பிரைமரி கேமராக்கள்: நான்கு
இதுதவிர 5,020 mAh பேட்டரி, USB டைப் சி போர்ட், 22.5 W சார்ஜர், 3.5mm இயர்போன், இன்ப்ரா ரெட், பிராக்ஸிமிட்டி சென்சார், அசிலேரோமீட்டர் சென்சார், லைட் சென்சார், விரல் ரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.
Is Redmi Note 9 Pro Max the best affordable camera phone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,590
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹41,061
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999