ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனில் அறிமுகமாகாத வேரியன்ட், வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.
அமேசான் பிரைம் டே சேலில், ரெட்மி நோட் 9 சிவப்பு வேரியன்ட் மாடல் விற்பனைக்கு வருகிறது.
ரெட்மி பிரியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட்டது. மொத்தம் மூன்று விதமான நிற வேரியன்டுகள் காட்டப்பட்டன. அவை, அக்வா கிரீன், ஆர்க்டிக் ஒயிட் மற்றும் பெப்பிள் கிரே ஆகும். இந்த மூன்று வேரியன்டுகளும் நாளை (ஜூலை 24) விற்பனைக்கு வருகிறது.
நான்காவதாக ஒரு வெரியன்ட் இருந்த்து. ஆனால், அது அறிமுகம் செய்யப்படவில்லை. வெறும் டீசர் மட்டும் லீக்கானது. அந்த வேரியன்ட் சிவப்பு நிற வண்ணத்தில் இருந்தது. அதாவது ஸ்கார்லெட் ரெட் வேரியன்ட். இந்த நிலையில், ரெட்மி நோட் 9 ஸ்கார்லெட் சிவப்பு வேரியன்ட் ஸ்மார்ட்போன் வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 6 ஆம் தேதி அமேசானின் பிரைம் டே சேல் நடைபெறுகிறது. இந்த சேலில்தான் ரெட்மி நோட் 9 ஸ்கார்லட் ரெட் வேரியன்ட் விற்பனைக்கு வருகிறது. இது புதிய வேரியன்ட் மட்டுமே. மற்றபடி, விலை, சிறப்பம்சங்கள் அனைத்தும் இதர ரெட்மி நோட் 9 மாடலில் உள்ளபடியாகும்.
ரெட்மி நோட் 9 விலை:
4ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை 11,999 ரூபாய் என்றும், 4ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியன்டின் விலை 13,499 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, 6ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை 14,999 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எப்படி வாங்கலாம்?
நாளை (ஜூலை 24) மதியம் 12 மணிக்கு ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. வாடிக்கையாளர்கள் இதனை mi.com, அமேசான், Mi ஹோம் ஸ்டோர்ஸ் ஆகியவற்றில் வாங்கிக் கொள்ளலாம்.
ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனில் உள்ள சிறப்பம்சங்கள்:
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
திரை அளவு: 6.53 இன்ச்
ப்ரொடக்ஷன்: கார்னிங் கொரிலா கிளாஸ் 5
பிராசசர்: மீடியாடெக் ஹூலியோ G85 SoC
கேமரா:
செல்ஃபி கேமரா: 13 மெகா பிக்சல்
பிரைமரி கேமராக்கள்: நான்கு
சாம்சங் ஐசேசெல் பிரைட் GM1 சென்சாருடன் கூடிய 48 MP பிரைமரி கேமரா
f/2.2 அல்ட்ரா வைட் லென்ஸ் கொண்ட 8 MP செகன்டரி கேமரா
f/2.4 அப்பாச்சர் மக்ரோ லென்ஸ் கொண்ட 2MP கேமரா
f2/4 லென்ஸ் கொண்ட 2MP டெப்த் சென்சார் கேமரா
இதுதவிர 5,020 mAh பேட்டரி, USB டைப் சி போர்ட், 22.5 W சார்ஜர், 3.5mm இயர்போன், 9W ரிவர்ஸ் சார்ஜிங், இன்ப்ரா ரெட், பிராக்ஸிமிட்டி சென்சார், அசிலேரோமீட்டர் சென்சார், லைட் சென்சார், விரல் ரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.
Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy S27 Pro Leak Hints at Display Size, Tipped to Launch With 5,000mAh Battery
Samsung Galaxy A27 Leaked in New Mint Colour Option Ahead of Anticipated Launch
Vivo X Fold 6 Confirmed to Launch in China Soon With OriginOS 6 Fold Skin, New AI Features