10,999 ரூபாய் துவக்க விலையில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் ரெட்மீ நோட் 7S
முன்னதாக சியோமி நிறுவனத்தின் அறிவிப்பின்படி, தனது அடுத்த ஸ்மார்ட்போனான 'ரெட்மீ நோட் 7S'-ஐ மே 20-ஆம் தேதி வெளியிடப்போவதாக கூறிப்பிட்டிருந்தது. அதன்படி, இந்த ஸ்மார்ட்போனை, தனது யூடூப் மற்றும் இணையதளங்களில் நேரலையில் அறிமுகப்படுத்தினார், ரெட்மீயின் நிர்வாக இயக்குனர் மனு குமார் ஜெய்ன். 10,999 ரூபாய் துவக்க விலையில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன், ஃப்ளிப்கார்ட், Mi.com மற்றும் எம் ஐ ஹோம் ஸ்டோர்களில் வருகின்ற மே 23-ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது. கேமராவுக்கென பல சிறப்பன்சங்களை கொண்டு வெளியாகவுள்ளதாக கூறப்படும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பற்றி கூறியுள்ள மனு ஜெய்ன், இந்த ஸ்மார்ட்போனில் பல சோதனைகளையும் மேற்கொண்டுள்ளார். இதன் கேமராக்களை சந்தையில் உள்ள, சில சிறந்த ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிட்டு, சிறந்த கேமரா வசதிகளை ரெட்மீ நோட் 7S கொண்டுள்ளது என்கிறார் சியோமி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்.
இந்தியாவில் இந்த 'ரெட்மீ நோட் 7S' இரண்டு வகைகளில் வெளியாகவுள்ளது. 3GB RAM + 32GB சேமிப்பு அளவு கொண்டு ஒரு ஸ்மார்ட்போனும், 4GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்டு மற்றொரு ஸ்மார்ட்போனும், வெளியாகவுள்ளது. 3GB RAM + 32GB சேமிப்பு அளவு கொண்ட 'ரெட்மீ நோட் 7S'-ன் விலை 10,999 ரூபாய் மற்றும் 3GB RAM + 32GB சேமிப்பு அளவு கொண்ட 'ரெட்மீ நோட் 7S'-ன் விலை 12,999 ரூபாய். இந்த ஸ்மார்ட்போன்கள் மொத்தம் மூன்று வண்ணங்களில் வெளியாகவுள்ளது. கருப்பு (Onyx Black), ப்ளூ (Sapphire Blue) மற்றும் சிவப்பு (Ruby Red) என்ற மூன்ற வண்ணங்களை கொண்டு வெளியாகவுள்ளது.
'ரெட்மீ நோட் 7S' ஸ்மார்ட்போனின் விற்பனையை மே 23-ஆம் தேதி மேற்கொள்ளவுள்ள சியோமி நிறுவனம், ஃபளிப்கார்ட், Mi.com மற்றும் எம் ஐ ஹோம் ஸ்டோர்கள் ஆகியவற்றில் விற்பனைக்கு வரவுள்ளது.
முன்னதாக இந்த ரெட்மீ நோட் தொடரில், ரெட்மீ நோட் 7S புதியதாக அறிமுகமாகவுள்ள நிலையில், ரெட்மீ நோட் 7 Pro மற்றும் ரெட்மீ நோட் 7 என இரண்டு மாடல்கள் இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் வெளியாகி, இன்னும் சந்தையில் வெற்றிகரமாக விற்பனையாகிக்கொண்டிடுக்கிறது. ரெட்மீ நோட் 7 Pro சென்ற வாரத்தின் துவக்கத்தில் 20 லட்சம் என்ற எண்ணிக்கையிலான விற்பனையை தொட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு நானோ சிம் வசதிகளை கொண்ட 'ரெட்மீ நோட் 7S' அண்ட்ராய்ட் பை அமைப்பை கொண்டுள்ளது. 6.3 இன்ச் FHD+ திரை (1080x2340 பிக்சல்), 19.5:9 திரை விகிதம், டாட் நாட்ச் டிஸ்ப்லே கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின், இரு புறங்களிலும் கொரில்லா கிளாஸ் 5 பொருத்தப்பட்டுள்ளது. 2.2GHz வேகம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன், ஆக்டா-கோர் குவல்கோம் ஸ்னேப்ட்ராகன் 660 எஸ் ஓ சி ப்ராசஸரை கொண்டு வெளியாகவுள்ளது.
இரண்டு பின்புற கேமராக்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமராவும், 5 மெகாபிக்சல் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 13 மெகாபிக்சல் அளவிலான கேமராவை கொண்டுள்ளது. இதில் போர்ட்ரைட் மோட்(Portrait mode) மற்றும் ஃபேஸ் அன்லாக்(Face unlock) வசதிகளும் உள்ளன.
32GB மற்றும் 64GB என இரு சேமிப்பு அளவுகளில் வெளியாகவுள்ள இந்த ஸ்மார்ட்போனில், 256GB வரை சேமிப்பை கூட்டிக்கொள்ளலாம். 4G வசதி மற்றும் ப்ளூடூத் v5, வை-பை வசதிகளை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 3.5mm ஹெட்போன் ஜாக்கையும் கொண்டுள்ளது. டை-C சார்ஜர் போர்டுடன் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன், 4,000mAh பேட்டரி அளவை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போன் 159.2x75.2x8.1mm என்ற அளவினை கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்