ரெட்மீ நோட் 7S, ஹானர் 20 Pro, ஓப்போ K3: இந்த வாரம் வெளியாகவுள்ள புதிய ஸ்மார்ட்போன்கள்!

ரெட்மீ நோட் 7S, ஹானர் 20 Pro, ஓப்போ K3: இந்த வாரம் வெளியாகவுள்ள புதிய ஸ்மார்ட்போன்கள்!

சிவப்பு நிற வண்ணத்தில் வெளியாகவுள்ள ரெட்மீ நோட் 7S

ஹைலைட்ஸ்
  • ஹானர் 20-ல் க்ரின் 980 எஸ் ஓ சி ப்ராசஸர்
  • 48 மெகாபிக்சல் கேமரா கொண்ட 'ரெட்மீ நோட் 7S' ஸ்மார்ட்போன்
  • ஓப்போ K3-யின் முன்புறம் 16 மெகாபிக்சலுடனான பாப்-அப் கேமரா
விளம்பரம்

ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் என்பது இந்த வாரத்தில் சற்று அதிகமாகவே உள்ளது. ரெட்மீ, ஹானர், ஓப்போ போன்ற முன்னனி நிறுவனங்கள் தங்களில் புதிய ஸ்மார்ட்போன்களை போட்டி போட்டுக்கொண்டு அறிமுகப்படுத்தவுள்ளது. சியோமி நிறுவனம், 48 மெகாபிக்சல் கேமரா கொண்ட 'ரெட்மீ நோட் 7S' ஸ்மார்ட்போனை இந்தியாவில் மே 20-ல் அறிமுகப்படுத்தவுள்ளது. ஹானர் நிறுவனமும் தனது அடுத்த ஸ்மார்ட்போன்களான ஹானர் 20 மற்றும் ஹானர் 20 Pro ஸ்மார்ட்போன்களை இந்த வாரத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது. மேலும் ஓப்போ மற்றும் இன்ஃபினிக்ஸ் ஆகிய நிறுவனங்களும் தங்கள் பங்கிற்கு ஓப்போ K3 மற்றும் இன்ஃபினிக்ஸ் S4 ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தவுள்ளது. 

ரெட்மீ நோட் 7S

சியோமி நிறுவனத்தின் புதிய அறிமுகமான 'ரெட்மீ நோட் 7S' இந்தியாவில் மே 20-ஆம் தேதி அறிமுகமாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன், ஃப்ளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரவுள்ளது. மேலும், ரெட்மீ தளங்களிலும் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மீ நோட் 7 Pro-வை அடுத்து இந்தியாவில் ரெட்மீ நிறுவனத்தால் வெளியிடப்படும் இரண்டாவது 48 மெகாபிக்சல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் இந்த  'ரெட்மீ நோட் 7S' தான். நாட்ச் டிஸ்ப்லே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 என பல அம்சங்களுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போன், கேமராவுக்கென பல பிரத்யேக அம்சங்களை கொண்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹானர் 20 மற்றும் ஹானர் 20 Pro

இந்த ஸ்மார்ட்போன்கள் அதிகாரப்பூர்வமாக மே 21-ஆம் தேதி அறிமுகமாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் க்ரின் 980 எஸ் ஓ சி ப்ராசஸர், மற்றும் நான்கு பின்புற கேமராக்களை கொண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 16 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதன் நான்காவது கேமரா, 8 மெகாபிக்சலுடனான தொலைதூர கேமராவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓப்போ K3 

ஓப்போ K3 மே 23ஆம் தேதி, அதிகாரப்பூர்வமாக சீனாவில் வெளியாகவுள்ளது. 8GB RAM வரை கொண்டு வெளியாகவுள்ள இந்த ஸ்மார்ட்போன், ஸ்னேப்ட்ராகன் 710 எஸ் ஓ சி ப்ராசஸரை கொண்டிருக்கலாம். மேலும், இதன் முன்புறம் 16 மெகாபிக்சலுடனான பாப்-அப் கேமரா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதில் 16 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் என இரண்டு பின்புற கேமராக்களை கொண்டிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இன்ஃபினிக்ஸ் S4

இந்த இன்ஃபினிக்ஸ் S4 ஸ்மார்ட்போனும் மே 21-ஆம் தேதி அறிமுகமாகவுள்ளது. ஃப்ளிப்கார்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஸ்மார்ட்போன் 32 மெகாபிக்சல் முன்புற கேமராவை கொண்டிருக்கிறது. சிறிய நாட்ச் திரை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், சமீபத்தில் ஆப்ரிக்காவில் வெளியான இன்ஃபினிக்ஸ் S4-ன் அம்சங்களையே கொண்டிருக்கிறது. இதில் 13 மெகாபிக்சல், 8 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் என மூன்று பின்புற கேமராவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 6.2 இன்ச் HD+ திரை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 4000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
 
 

விளம்பரம்

விளம்பரம்

© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »