இன்று மதியம் 12 மணிக்கு ரெட்மீ நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களான 'நோட் 7S' மற்றும் 'நோட் 7 Pro' ஆகியவற்றிற்கான ஃப்ளாஷ் சேலை நடத்தவுள்ளது.
 
                இன்று விற்பனையாகவுள்ள ரெட்மீ நோட் 7S
ரெட்மீயின் நோட் தொடரில் புதிதாக அறிமுகமான ஸ்மார்ட்போன் தான், 'ரெட்மீ நோட் 7S'. இந்த ஸ்மார்ட்போன், மே மாதம் 20-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகி, அதன் முதல் ஃப்ளாஷ் சேலை மே 23-ஆம் தேதி சந்தித்தது. ரெட்மீ என்றாலே பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள், பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் என்றாலே மிகுந்த வரவேற்பு. இப்படியான நிலையில் இருக்க, ரெட்மீ நிறுவனம், இந்த நோட் 7S-ன் அடுத்த ஃப்ளாஷ் சேலை, மே 29-ஆம் தேதி நடத்தப்போவதாக அறிவித்திருந்தது. அதன்படி இன்று மதியம் 12 மணிக்கு ரெட்மீ நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களான 'நோட் 7S' மற்றும் 'நோட் 7 Pro' ஆகியவற்றிற்கான ஃப்ளாஷ் சேலை நடத்தவுள்ளது. ஃப்ளிப்கார்ட் மற்றும் எம் ஐ தளங்களில் இந்த ஸ்மார்ட்போனை பெற்றுக்கொள்ளலாம்.
48 மெகாபிக்சல் கேமரா கொண்ட இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும், வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அறிமுகமாகி 3 மாதங்களே ஆன நிலையில், இந்தியாவில் மட்டும் 20 லட்சத்திற்கும் மேலான ரெட்மீ நோட் 7 Pro ஸ்மார்ட்போன்கள் விற்று தீர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன்களில் விலை, சிறப்பம்சங்கள் கீழே!
'ரெட்மீ நோட் 7S': விலை!
இந்தியாவில் இந்த 'ரெட்மீ நோட் 7S' இரண்டு வகைகளில் வெளியாகியுள்ளது. 3GB RAM + 32GB சேமிப்பு அளவு கொண்டு ஒரு ஸ்மார்ட்போனும், 4GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்டு மற்றொரு ஸ்மார்ட்போனும், வெளியாகியுள்ளது. 3GB RAM + 32GB சேமிப்பு அளவு கொண்ட 'ரெட்மீ நோட் 7S'-ன் விலை 10,999 ரூபாய் மற்றும் 3GB RAM + 32GB சேமிப்பு அளவு கொண்ட 'ரெட்மீ நோட் 7S'-ன் விலை 12,999 ரூபாய். இந்த ஸ்மார்ட்போன்கள் மொத்தம் மூன்று வண்ணங்களில் வெளியாகியுள்ளது. கருப்பு (Onyx Black), ப்ளூ (Sapphire Blue) மற்றும் சிவப்பு (Ruby Red) என்ற மூன்ற வண்ணங்களை கொண்டு வெளியாகியுள்ளது.
'ரெட்மீ நோட் 7 Pro': விலை!
இரண்டு வகைகள் கொண்ட 'ரெட்மீ நோட் 7 Pro'-வின் 4GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்ட ஸ்மார்ட்போனின் விலை 13,999 ரூபாய் மற்றும் 6GB RAM + 128GB சேமிப்பு அளவு கொண்ட ஸ்மார்ட்போனின் விலை 16,999 ரூபாய். இந்த ஸ்மார்ட்போன்கள் நீலம் (Neptune Blue), சிவப்பு (Nebula Red), மற்றும் கருப்பு (Space Black) என்ற மூன்ற வண்ணங்களை கொண்டு வெளியாகியுள்ளது.
'ரெட்மீ நோட் 7S': சிறப்பம்சங்கள்!
இரண்டு நானோ சிம் வசதிகளை கொண்ட 'ரெட்மீ நோட் 7S' அண்ட்ராய்ட் பை அமைப்பை கொண்டுள்ளது. 6.3 இன்ச் FHD+ திரை (1080x2340 பிக்சல்), 19.5:9 திரை விகிதம், டாட் நாட்ச் டிஸ்ப்லே கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின், இரு புறங்களிலும் கொரில்லா கிளாஸ் 5 பொருத்தப்பட்டுள்ளது. 2.2GHz வேகம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன், ஆக்டா-கோர் குவல்கோம் ஸ்னேப்ட்ராகன் 660 எஸ் ஓ சி ப்ராசஸரை கொண்டுள்ளது.
இரண்டு பின்புற கேமராக்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமராவும், 5 மெகாபிக்சல் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 13 மெகாபிக்சல் அளவிலான கேமராவை கொண்டுள்ளது. இதில் போர்ட்ரைட் மோட்(Portrait mode) மற்றும் ஃபேஸ் அன்லாக்(Face unlock) வசதிகளும் உள்ளன.
32GB மற்றும் 64GB என இரு சேமிப்பு அளவுகளில் வெளியாகவுள்ள இந்த ஸ்மார்ட்போனில், 256GB வரை சேமிப்பை கூட்டிக்கொள்ளலாம். 4G வசதி மற்றும் ப்ளூடூத் v5, வை-பை வசதிகளை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 3.5mm ஹெட்போன் ஜாக்கையும் கொண்டுள்ளது. டை-C சார்ஜர் போர்டுடன் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன், 4,000mAh பேட்டரி அளவை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போன் 159.2x75.2x8.1mm என்ற அளவினை கொண்டுள்ளது.
'ரெட்மீ நோட் 7S': சிறப்பம்சங்கள்!
இரண்டு நானோ சிம் வசதிகளை கொண்ட 'ரெட்மீ நோட் 7S' அண்ட்ராய்ட் பை அமைப்பை கொண்டுள்ளது. 6.3 இன்ச் FHD+ திரை (1080x2340 பிக்சல்), 19.5:9 திரை விகிதம், டாட் நாட்ச் டிஸ்ப்லே கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போன், ஆக்டா-கோர் குவல்கோம் ஸ்னேப்ட்ராகன் 675 எஸ் ஓ சி ப்ராசஸரை கொண்டுள்ளது.
இரண்டு பின்புற கேமராக்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமராவும், 5 மெகாபிக்சல் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 13 மெகாபிக்சல் அளவிலான கேமராவை கொண்டுள்ளது. இதில் போர்ட்ரைட் மோட்(Portrait mode) வசதி உள்ளது.
128GB வரை சேமிப்பு அளவை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில், 256GB வரை சேமிப்பை கூட்டிக்கொள்ளலாம். 4G வசதி மற்றும் ப்ளூடூத் v5, வை-பை வசதிகளை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 3.5mm ஹெட்போன் ஜாக்கையும் கொண்டுள்ளது. டை-C சார்ஜர் போர்டுடன் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன், 4,000mAh பேட்டரி அளவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் க்விக் சார்ஜ் 4.0 வசதியை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போன் 159.2x75.2x8.1mm என்ற அளவினை கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
 Scientists May Have Finally Solved the Sun’s Mysteriously Hot Atmosphere Puzzle
                            
                            
                                Scientists May Have Finally Solved the Sun’s Mysteriously Hot Atmosphere Puzzle
                            
                        
                     Vivo X300 Series Launched Globally With 200-Megapixel Zeiss Camera, Up to 6.78-Inch Display: Price, Features
                            
                            
                                Vivo X300 Series Launched Globally With 200-Megapixel Zeiss Camera, Up to 6.78-Inch Display: Price, Features
                            
                        
                     Canva Introduces Revamped Video Editor, New AI Tools and a Marketing Platform
                            
                            
                                Canva Introduces Revamped Video Editor, New AI Tools and a Marketing Platform
                            
                        
                     Thode Door Thode Paas OTT Release Date: Know When and Where to Watch it Online
                            
                            
                                Thode Door Thode Paas OTT Release Date: Know When and Where to Watch it Online