ஃப்ளிப்கார்ட் தளம், Mi.com மற்றும் எம்.ஐ ஹோம் ஸ்டோர் ஆகிய தளங்களில் விற்பனையாகவுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை வெள்ளிக்கிழமை, மே 31-ஆம் தேதி நள்ளிரவு 12:01 மணியிலிருந்து துவங்கியுள்ளது.
இந்தியாவில் வெளியாகியுள்ள ரெட்மீ நோட் 7S.
ரெட்மீ நிறுவனம் இந்தியாவில் புதிதாக அறிமுகப்படுத்திய ஸ்மார்ட்போன் தான் இந்த 'நோட் 7S'. இந்த தொடரில், இதன் முந்தைய ஸ்மார்ட்போனான 'ரெட்மீ நோட் 7 Pro' இந்தியாவில் 20 லட்சம் அளவிலான ஸ்மார்ட்போன்கள் விற்றுத்தீர்ந்ததை அடுத்து, அதனை கொண்டாடும் வகையில் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், ரெட்மீ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மனு குமார் ஜெய்னால் மே 20-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டு, மே 23 மற்றும் மே 29 ஆகிய தேதிகளில் ஃப்ளாஷ் சேலில் விற்பனை மேற்கொள்ளப்பட்டது. இன்னிலை, மே 31-ஆம் அன்று இந்த ஸ்மார்ட்போன் திறந்த விற்பனைக்கு வருகிறது என அறிவித்துள்ளது ரெட்மீ நிறவனம். விற்பனை, விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய தகவல்கள் உள்ளே.
'ரெட்மீ நோட் 7S': விற்பனை!
ஃப்ளிப்கார்ட் தளம், Mi.com மற்றும் எம்.ஐ ஹோம் ஸ்டோர் ஆகிய தளங்களில் விற்பனையாகவுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை வெள்ளிக்கிழமை, மே 31-ஆம் தேதி நள்ளிரவு 12:01 மணியிலிருந்து துவங்கியுள்ளது.
முன்னதாக கூறியது போலவே, மே 20-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போனிற்கு, மே 23 மற்றும் மே 29 ஆகிய தேதிகளில் ஃப்ளாஷ் சேல் நடைபெற்றது.
'ரெட்மீ நோட் 7S': விலை!
'ரெட்மீ நோட் 7S' இரண்டு வகைகளில் விற்பனையாகவுள்ளது. 3GB RAM + 32GB சேமிப்பு அளவு கொண்டு ஒரு ஸ்மார்ட்போனும், 4GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்டு மற்றொரு ஸ்மார்ட்போனும், வெளியாகியுள்ளது. 3GB RAM + 32GB சேமிப்பு அளவு கொண்ட 'ரெட்மீ நோட் 7S'-ன் விலை 10,999 ரூபாய் மற்றும் 3GB RAM + 32GB சேமிப்பு அளவு கொண்ட 'ரெட்மீ நோட் 7S'-ன் விலை 12,999 ரூபாய். இந்த ஸ்மார்ட்போன் கருப்பு (Onyx Black), ப்ளூ (Sapphire Blue) மற்றும் சிவப்பு (Ruby Red) என மூன்ற வண்ணங்களை கொண்டுள்ளது.
'ரெட்மீ நோட் 7S': சிறப்பம்சங்கள்!
இரண்டு நானோ சிம் வசதிகளை கொண்ட 'ரெட்மீ நோட் 7S' அண்ட்ராய்ட் பை அமைப்பை கொண்டுள்ளது. 6.3 இன்ச் FHD+ திரை (1080x2340 பிக்சல்), 19.5:9 திரை விகிதம், டாட் நாட்ச் டிஸ்ப்லே கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின், இரு புறங்களிலும் கொரில்லா கிளாஸ் 5 பொருத்தப்பட்டுள்ளது. 2.2GHz வேகம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன், ஆக்டா-கோர் குவல்கோம் ஸ்னேப்ட்ராகன் 660 எஸ் ஓ சி ப்ராசஸரை கொண்டு வெளியாகவுள்ளது.
இரண்டு பின்புற கேமராக்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமராவும், 5 மெகாபிக்சல் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 13 மெகாபிக்சல் அளவிலான கேமராவை கொண்டுள்ளது. இதில் போர்ட்ரைட் மோட்(Portrait mode) மற்றும் ஃபேஸ் அன்லாக்(Face unlock) வசதிகளும் உள்ளன.
32GB மற்றும் 64GB என இரு சேமிப்பு அளவுகளில் வெளியாகவுள்ள இந்த ஸ்மார்ட்போனில், 256GB வரை சேமிப்பை கூட்டிக்கொள்ளலாம். 4G வசதி மற்றும் ப்ளூடூத் v5, வை-பை வசதிகளை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 3.5mm ஹெட்போன் ஜாக்கையும் கொண்டுள்ளது. டை-C சார்ஜர் போர்டுடன் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன், 4,000mAh பேட்டரி அளவை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போன் 159.2x75.2x8.1mm என்ற அளவினை கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Honor Power 2 Chipset, Display Specifications Tipped; Could Launch With 10,080mAh Battery
Hollow Knight: Silksong's First Major Expansion, Sea of Sorrow, Announced; Launch Set for 2026