3GB RAM + 32GB சேமிப்பு அளவு கொண்ட 'ரெட்மீ நோட் 7S'-ன் விலை 10,999 ரூபாய் மற்றும் 3GB RAM + 32GB சேமிப்பு அளவு கொண்ட 'ரெட்மீ நோட் 7S'-ன் விலை 12,999 ரூபாய்.
கடந்த மே 20 அன்று அறிமுகமான 'ரெட்மீ நோட் 7S'
கடந்த மே 20-ஆம் தேதி, இந்தியாவில் 'ரெட்மீ நோட் 7S', அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மனு குமார் ஜெய்னால் அறிமுகப்படுத்தப்பட்டது. 48 மெகாபிக்சல் கேமரா கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் முதல் ஃப்ளாஷ் சேல், கடந்த மே 23-ஆம் தேதி நடத்தப்பட்டது. அந்த விற்பனை முடிந்த நிலையில், மீண்டும் அடுத்த ஃப்ளாஷ் சேலை அறிவித்துள்ளது ரெட்மீ நிறுவனம். அதன்படி, தனது அடுத்த 'ரெட்மீ நோட் 7S' ஸ்மார்ட்போனின் விற்பனையை மே 29-ஆம் தேதி மேற்கொள்ளவுள்ளது சியோமி நிறுவனம். ஃபளிப்கார்ட், Mi.com மற்றும் எம் ஐ ஹோம் ஸ்டோர்கள் ஆகியவற்றில் விற்பனைக்கு வரவுள்ளது.
இந்தியாவில் இந்த 'ரெட்மீ நோட் 7S' இரண்டு வகைகளில் வெளியாகவுள்ளது. 3GB RAM + 32GB சேமிப்பு அளவு கொண்டு ஒரு ஸ்மார்ட்போனும், 4GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்டு மற்றொரு ஸ்மார்ட்போனும், வெளியாகவுள்ளது. 3GB RAM + 32GB சேமிப்பு அளவு கொண்ட 'ரெட்மீ நோட் 7S'-ன் விலை 10,999 ரூபாய் மற்றும் 3GB RAM + 32GB சேமிப்பு அளவு கொண்ட 'ரெட்மீ நோட் 7S'-ன் விலை 12,999 ரூபாய். இந்த ஸ்மார்ட்போன்கள் மொத்தம் மூன்று வண்ணங்களில் வெளியாகவுள்ளது. கருப்பு (Onyx Black), ப்ளூ (Sapphire Blue) மற்றும் சிவப்பு (Ruby Red) என்ற மூன்ற வண்ணங்களை கொண்டு வெளியாகவுள்ளது.
இரண்டு நானோ சிம் வசதிகளை கொண்ட 'ரெட்மீ நோட் 7S' அண்ட்ராய்ட் பை அமைப்பை கொண்டுள்ளது. 6.3 இன்ச் FHD+ திரை (1080x2340 பிக்சல்), 19.5:9 திரை விகிதம், டாட் நாட்ச் டிஸ்ப்லே கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின், இரு புறங்களிலும் கொரில்லா கிளாஸ் 5 பொருத்தப்பட்டுள்ளது. 2.2GHz வேகம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன், ஆக்டா-கோர் குவல்கோம் ஸ்னேப்ட்ராகன் 660 எஸ் ஓ சி ப்ராசஸரை கொண்டு வெளியாகவுள்ளது.
இரண்டு பின்புற கேமராக்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமராவும், 5 மெகாபிக்சல் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 13 மெகாபிக்சல் அளவிலான கேமராவை கொண்டுள்ளது. இதில் போர்ட்ரைட் மோட்(Portrait mode) மற்றும் ஃபேஸ் அன்லாக்(Face unlock) வசதிகளும் உள்ளன.
32GB மற்றும் 64GB என இரு சேமிப்பு அளவுகளில் வெளியாகவுள்ள இந்த ஸ்மார்ட்போனில், 256GB வரை சேமிப்பை கூட்டிக்கொள்ளலாம். 4G வசதி மற்றும் ப்ளூடூத் v5, வை-பை வசதிகளை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 3.5mm ஹெட்போன் ஜாக்கையும் கொண்டுள்ளது. டை-C சார்ஜர் போர்டுடன் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன், 4,000mAh பேட்டரி அளவை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போன் 159.2x75.2x8.1mm என்ற அளவினை கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Clair Obscur: Expedition 33 Wins Game of the Year, Sweeps The Game Awards 2025 With 9 Wins: Full Winners' List
Huawei Mate X7 With Kirin 9030 Pro Chip, 8-Inch OLED Inner Display Launched Globally: Price, Specifications