டிசம்பர் 10-ல் வெளியாகும் Redmi K30 Series! விவரங்கள் உள்ளே....

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 26 நவம்பர் 2019 13:12 IST
ஹைலைட்ஸ்
  • Redmi K30-சீரிஸில் Redmi K30 மற்றும் Redmi K30 Pro ஆகியவை அடங்கும்
  • ரெட்மி பொது மேலாளர் Lu Weibing வெளியீட்டு தேதியை அறிவித்தார்
  • Redmi K30 போனில் hole-punch டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டிருக்கும்

ஜியோமியின் Redmi K20 மாடல்களின் தொடர்ச்சியாக Redmi K30 series வரும்

Redmi K30 சீரிஸ் டிசம்பர் 10-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட உள்ளது என்று ரெட்மி பொது மேலாளர் லு வெய்பிங் (Lu Weibing) வெய்போவில் வெளியிட்ட பதிவின் மூலம் அறிவித்தார். புதிய சீரிஸில் Redmi K30 மற்றும் Redmi K30 Pro ஆகியவை அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோமி பிராண்ட் ரெட்மி இந்த ஆண்டின் தொடக்கத்தில் Redmi K20 மற்றும் Redmi K20 Pro-வை அதன் முதல் ரெட்மி K-சீரிஸ் ஸ்மார்ட்போன்களாக கொண்டு வந்தது. Redmi K30 அதன் முறையான அறிமுகத்திற்குப் பிறகு விரைவில் சீனாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், Redmi K30 Pro அடுத்த ஆண்டு எப்போதாவது விற்பனைக்கு வரும் என்று வதந்தி பரவியுள்ளது.

வெய்பிங்கின் வெயிபோ பதிவின் படி, Redmi K30 சீரிஸ் 5G ஆதரவுடன் வரும் - standalone (SA) மற்றும் non-standalone (NSA) 5G நெட்வொர்க்குகளுக்கான வன்பொருள் அடங்கும். ஜியோமி வழங்கும் புதிய ஸ்மார்ட்போன் தொடரும் Samsung Galaxy S10 மாடல்களைப் போலவே hole-punch டிஸ்ப்ளே வடிவமைப்புடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Redmi K30 series வெளியீட்டு தேதி Weibo பதிவு மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது
Photo Credit: Weibo/ Lu Weibing

கடந்த வாரம், ஜியோமி தலைமை நிர்வாக அதிகாரி Lei Jun சீனாவில் Redmi K30 அறிமுகத்தை கிண்டல் செய்தார். Xiaomi டெவலப்பர்கள் மாநாட்டில் அதன் தாமதத்தின் செய்தி இணையத்தில் வெளிவந்த சில நாட்களில், 5G போனை அறிமுகப்படுத்தியதை நிர்வாகி சிறப்பித்ததாக கூறப்படுகிறது.

Redmi K30 மற்றும் Redmi K30 Pro இரண்டும் டிசம்பர் 10-ஆம் தேதி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், வெய்பிங்கின் வெய்போ பதிவு "சீரிஸ்" என்ற வார்த்தையை குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், Redmi K30 சீனாவுக்கு வந்தவுடன் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதேசமயம் Redmi K30 Pro கிடைப்பதில் சிறிது தாமதம் ஏற்படக்கூடும். குறிப்பாக சமீபத்திய வதந்திகளை நம்பினால்.

நினைவுகூர, ஜியோமி இந்த ஆண்டு மே மாதம் சீனாவில் Redmi K20 மற்றும் Redmi K20 Proவை அறிமுகப்படுத்தியது. இரண்டு போன்களும் ஜூலை மாதம் இந்தியாவுக்கு வந்தன.


Redmi K30, Redmi K30 Pro-வின் விவரக்குறிப்புகள் (வதந்தியானவை):

Redmi K30 மற்றும் Redmi K30 Pro, Android 10 உடன் MIUI 11-ல் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Redmi K30, 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் சீனாவின் 3C சான்றிதழைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த போன் pixel density of 395ppi மற்றும் 120Hz refresh rate உடன் 6.66-inch full-HD+ (1080x2400 pixels) டிஸ்பிளேவுடன் வரும் என்று அதன் கசிந்த சில படங்கள் தெரிவிக்கின்றன. ஒரு புதிய Qualcomm Snapdragon 7xx series SoC-யும் இருக்கக்கூடும். இருப்பினும், 5G-supported MediaTek பிராசசரை ஜியோமி வழங்கும் என்று சமீபத்திய வதந்தி கூறியது. மறுகையில் Redmi K30 Pro-வானது Qualcomm-ன் அடுத்த தலைமுறை Snapdragon 865 SoC-யை உள்ளடக்கும்.
 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Redmi K30, Redmi K30 Pro, Redmi, Xiaomi
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. OPPO Find X9, Dimensity 9500 உடன் கூடிய Find X9 Pro அறிவிக்கப்பட்டது: விலை, விவரக்குறிப்புகள்
  2. Realme C85 Pro Geekbench Listing! 7000mAh பேட்டரி, Snapdragon 685: விலை செக் பண்ணுங்க!
  3. S26 சீரிஸ்ல Samsung-ன் மாஸ்டர் பிளான்! Bluetooth 6.1 சப்போர்ட்டுடன் Exynos S6568 சிப்!
  4. iQOO Neo 11 வருகிறான்! 7500mAh பேட்டரி, 144Hz டிஸ்பிளே-னு வெறித்தனம் அக்டோபர் 30 லான்ச்
  5. Redmi Turbo 5-ன் புதிய லீக்! 1.5K டிஸ்பிளே, IP68 ரேட்டிங்: Poco X8 Pro-வா இந்தியாவுக்கு வரும்?
  6. DSLR-க்கு டஃப் கொடுக்க Vivo ரெடி! Zeiss-உடன் கைகோத்து Vivo X300 சீரிஸ் இந்தியாவிற்கு வருது
  7. OnePlus-ன் கேமிங் ராட்சசன் வந்துட்டான்! 7,800mAh பேட்டரி பவர்! 165Hz டிஸ்ப்ளே! OnePlus Ace 6-ன் அம்சங்கள் என்னென்ன?
  8. ஒன்பிளஸ் 15 வந்துவிட்டது! பேட்டரி வேற லெவல்! 7300mAh பேட்டரி பவர் விலையும், ஸ்பெக்ஸ்ஸும் பார்க்கலாமா?
  9. கேமராவில் புரட்சி! 200 மெகாபிக்சல் பெரிஸ்கோப் உடன் Xiaomi 17 Ultra வரப்போகுது
  10. அல்ட்ரா-ஸ்லிம் செக்மென்ட்டில் Motorola-வின் புதிய ஆட்டம்! Moto X70 Air இந்திய லான்ச் டீஸ் ஆகி இருக்கு! விலை ₹30,000-க்குள் இருக்குமா?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.