ரெட்மி கே 30 ப்ரோ ஜூம் பதிப்பில் 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர் அடங்கும், இது 3 எக்ஸ் ஆப்டிகல் ஜூம் மற்றும் 30 எக்ஸ் டிஜிட்டல் ஜூம் ஆகியவற்றை வழங்குகிறது, மேலும் பின்புறத்தில் மூன்று சென்சார்களும் உள்ளன.
Photo Credit: Weibo
ரெட்மி கே 30 ப்ரோ ஜூம் பதிப்பிற்கான 12 ஜிபி + 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை சிஎன்ஒய் 4,499 ஆகும்.
ரெட்மி கே 30 ப்ரோ ஜூம் பதிப்பு கடந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜுடன் வெளியிடப்பட்டன. இப்போது நிறுவனம் ஜூம் பதிப்பிற்கான 12 ஜிபி + 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டை அறிவித்துள்ளது.
Redmi K30 Pro Zoom Edition-கான 12 ஜிபி + 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை சிஎன்ஒய் 4,499 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.48,200) ஆகும்.
ரெட்மி கே 30 ப்ரோ ஜூம் பதிப்பு ஸ்னாப்டிராகன் 865 SoC ஆல் இயக்கப்படுகிறது. இது 6.67-இன்ச் ஃபுல்-எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) எச்டிஆர் 10 + அமோலேட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.
ரெட்மி கே 30 ப்ரோ ஜூம் பதிப்பில், 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, 13 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் ஷூட்டர், 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர், இது 3 எக்ஸ் ஆப்டிகல் ஜூம் மற்றும் 30 எக்ஸ் டிஜிட்டல் ஜூம் ஆகியவற்றை வழங்குகிறது. இறுதியாக, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கொண்டுள்ளது. இந்த போனில், 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,700 எம்ஏஎச் பேட்டரி உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்