ரெட்மி K30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் சீனாவில் 1,999 CNY (இந்திய மதிப்பில் சுமார் 21,500 ரூபாய்) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளன
சீனாவில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் ரெட்மி K30 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது
ஷாவ்மி தரப்பில் புதிதாக ரெட்மி K30 ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
ஷாவ்மியின் ரெட்மி K20 சீரிஸ் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பைப் பெற்றது. இந்த நிலையில், தற்போது புதிதாக ரெட்மி K30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் அமோலேட் டிஸ்பிளே, மீடியாடெக் டைமென்சிட்டி 1000+ SoC பிராசசர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. மேலும், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும், பின்பக்கத்தில் 64 மெகா பிக்சல் பிரைமரி கேமராவும் உள்ளன.
ரெட்மி k30யின் மற்ற ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் பிராசசர் உள்ளன. ரெட்மி K30 ப்ரோ, ரெட்மி K30 ப்ரோ ஜூம் எடிசன் ஆகியவற்றில் ஸ்நாப்டிராகன் 865 SoC பிராசசர் உள்ளது. இது ஸ்நாப்டிராகனின் புத்தம் புதிய பிராசசர் ஆகும்.
ரெட்மி K30 விலை:
ரெட்மி K30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் சீனாவில் 1,999 CNY (இந்திய மதிப்பில் சுமார் 21,500 ரூபாய்) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதில் 6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி உள்ளது. இதே போல் 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை 2,199CNY (இந்திய மதிப்பில் 23,600) ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 8ஜிபி ரேம், 512ஜிபி மெமரி கொண்ட வேரியன்டின் விலை 2,699 CNY (இந்திய மதிப்பில் 29,000 ரூபாய்) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
சீனாவில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் ரெட்மி K30 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. மொத்தம் மூன்று விதமான நிறங்களில் அறிமுகமாகியுள்ளன. அவை, மூன்லைட் வயிட், மிட்நைட் பிளாக், மினட் கிரீன் ஆகும்.
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
திரை அளவு: 6.67 இன்ச்
திரைத்தன்மை: அமோலேட்
பிராசசர்: மீடியா டெக் 7nm மற்றும் ஸ்நாப்டிராகன்
கேமரா: 64MP பிரைமரி கேமராவுடன் குவாட் கேமரா அமைப்பு, பின்பக்கத்தில் 20 மெகா பிக்சலுடன் பாப் அப் செல்ஃபி கேமரா
பேட்டரி சக்தி: 4,500 mAh
சார்ஜ்: 33W ஃபாஸ்ட் சார்ஜ்
டைப் சி போர்ட்
கூடுதல் சிறப்பம்சங்கள்: ஆடியோ ஜூம்
Is Redmi Note 9 the perfect successor to Redmi Note 8? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Single Papa OTT Release Date: When and Where to Watch Kunal Khemu’s Upcoming Comedy Drama Series?
Diesel Set for OTT Release Date: When and Where to Harish Kalyan's Action Thriller Online?