Redmi 8 இன்று அறிமுகம்! விவரங்கள் உள்ளே....

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 9 அக்டோபர் 2019 15:05 IST
ஹைலைட்ஸ்
  • Redmi 8 அக்டோபர் 12 முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும்
  • Redmi போன் பல வண்ணங்களில் வருகிறது
  • Redmi 9-ல் MIUI 10 உடன் Android Pie-ஐ ஜியோமி வழங்குகிறது

6.22-inch HD+ Dot Notch display-வுடன் வருகிறது Redmi 8

Redmi 8 இந்தியாவில் புதன்கிழமை (இன்று) அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜியோமி அறிமுகப்படுத்திய Redmi 7 க்கு அடுத்தபடியாக புதிய Redmi தொலைபேசி வருகிறது.

இந்தியாவில் Redmi 8-ன் விலை மற்றும் விற்பனை விவரங்கள்

இந்தியாவில் Redmi 8-ன் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜின் விலை 7,999 ரூபாயாகவும், அதன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜின் விலை 8,999 ரூபாயகவும் விலை குறிப்பிடப்பட்டுள்ளது. 3 ஜிபி ரேம் வேரியண்ட்டை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களும் 4 ஜிபி ரேம் வேரியண்டாக மேம்படுத்தப்படுவார்கள் என்று ஜியோமி இந்திய தலைவர் Manu Kumar Jain லைவ் ஸ்ட்ரீமின் போது அறிவித்தார்.

Redmi 8 இந்த வார தொடக்கத்தில் உக்ரேனில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தொலைபேசி 3 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜின் விலை UAH 3,999 (தோராயமாக ரூ. 11,500)-யாகவும், அதன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜின் விலை UAH 4,499 (தோராயமாக ரூ. 13,000)-யாகவும் விற்பனைக்கு வருகிறது.

Redmi 8-ல் Oynx Black, Ruby Red, Sapphire Blue மற்றும் Emerald Green colour மற்றும் splash-resistant P2i coating உள்ளது. இந்த தொலைபேசி அக்டோபர் 12 சனிக்கிழமை நள்ளிரவு முதல் விற்பனைக்கு வரும். மேலும், இது Mi.com, Mi Home stores மற்றும் Flipkart மூலம் விற்பனைக்கு கிடைக்கும்.

Redmi 8-ன் சிறப்பம்சங்கள்

 Redmi 8 இரட்டை சிம் (நானோ), Android 9 Pie உடன் MIUI 10 இயங்குகிறது. Corning Gorilla Glass 5 பாதுகாப்புடன் 6.22-inch HD+ Dot Notch display அம்சத்தைக் கொண்டுள்ளது. 4 ஜிபி ரேம் வரை octa-core Qualcomm Snapdragon 439 SoC உடன் இணைக்கப்பட்டுள்ளது.

Redmi 8 இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில்  f/1.8 lens உடன் 12-megapixel Sony IMX363 primary sensor மற்றும் 2-megapixel depth sensor ஆகியவை அடங்கும். rear camera கேமரா அமைப்பில் உள்ள முதன்மை சென்சார் Mi Mix 2S மற்றும் Poco F1-ல் இடம்பெற்றதை ஒத்திருக்கிறது. preloaded AI Portrait மற்றும் AI Scene Detection ஆகிய அம்சங்கள் உள்ளன.

Advertisement

செல்ஃபிக்களுக்கு, முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா சென்சார் உள்ளது. Face Unlock உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு (AI) இயங்கும் அம்சங்களும் உள்ளன.

Redmi 8-ல் 64 ஜிபி வரை உள் சேமிப்பிடத்தை வழங்கியுள்ளது ஜியோமி. இது microSD card வழியாக (up to 512GB) ஒரு பிரத்யேக ஸ்லாட்டுடன் விரிவாக்கக்கூடியது. தொலைபேசியில் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi, GPS/ A-GPS, infrared, wireless FM radio, 3.5mm headphone jack மற்றும் USB Type-C port ஆகியவை அடங்கும். மேலும், தொலைபேசியின் பின்புறத்தில் fingerprint சென்சார் உள்ளது.

Advertisement

Redmi 8, 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது பல்வேறு AI மேம்படுத்தல்களுடன் செயல்படுகிறது. மேலும், 18W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இருப்பினும், retail box-ல் 10W சார்ஜர் உள்ளது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good looks and build quality
  • USB Type-C port, wireless FM radio
  • All-day battery life
  • Bad
  • Weak processor
  • Poor camera quality in low light
  • Bloatware and spammy notifications in MIUI
 
KEY SPECS
Display 6.22-inch
Processor Qualcomm Snapdragon 439
Front Camera 8-megapixel
Rear Camera 12-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android 9 Pie
Resolution 720x1520 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Redmi 8 price in India, Redmi 8 specifications, Redmi 8, Xiaomi, Redmi
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iPhone 17 Air: 5.5mm மெல்லிய டிசைன், ₹80,000-க்கு 5G! ஆப்பிளின் புது ஸ்லிம் ஹீரோ!
  2. Apple Watch Series 11, Ultra 3, SE 3: 5G RedCap, S11 சிப், சாட்டிலைட் SOS! #AweDropping இவென்டில் அறிமுகம்! #AppleWatch
  3. iPhone 17 Pro-ல 8X ஜூம், 5,000mAh பேட்டரி, வேப்பர் கூலிங்! 'Awe Dropping' இவென்டுக்கு முன் பெரிய லீக்ஸ்
  4. iPhone 17 Air, Watch Series 11, AirPods Pro 3! ஆப்பிளின் 'Awe Dropping' இவென்ட் இன்று 10:30 PM IST-ல லைவ்
  5. "இது வேற லெவல்!" - Apple-ன் 'Awe Dropping' நிகழ்வு! iPhone 17, Apple Watch Series 11, AirPods Pro 3-ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?
  6. 7,000mAh பேட்டரி கொண்ட உலகின் முதல் போன்! Oppo F31 சீரிஸ் லீக் ஆகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
  7. அவசர வேலைகளில் 'உதவாத' ஏர்டெல்! ஒரே வாரத்தில் இரண்டாவது முறை சேவை முடக்கம்
  8. மடக்கலாம், மிரட்டலாம்! Honor-ன் புது போன் சந்தையில் அறிமுகம்! விலை, சிறப்பம்சங்கள் இதோ!
  9. பெங்களூருவில் Apple-ன் புதிய கடை! செப்டம்பர் 2-ல் திறப்பு! என்ன ஸ்பெஷல்?
  10. இந்தியாவில் Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL லான்ச்! ₹79,999-க்கு Google-ன் புது அஸ்திரம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.