பின்புறத்தில் 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா, 2MP அல்ட்ரா மேக்ரோ லென்ஸ், 2MP டெப்த் சென்சார் கேமரா உள்ளன
ரெட்மி நோட் 8 கோரல் ஆரஞ்சு வேரியன்ட் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
கடந்தாண்டு ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு வருடத்துக்குப் பின்பு தற்போது கோரல் ஆரஞ்ச் என்ற வேரியன்ட் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஷாவ்மி தரப்பில் கடந்த ஆண்டு ரெட்மி 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த ஆண்டு ரெட்மி 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களும் வந்து விட்டன. ஆனால், 8 சீரிஸ்க்கு கிடைத்த வரவேற்பு 9 சீரிஸ்க்கு அவ்வளவாக கிடைக்கவில்லை.
இந்த நிலையில், தற்போது ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஆரஞ்சு நிறத்துடன் புதிய வேரியன்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக நோட் 8 ஸ்மார்ட்போன் கடந்த அக்டோபரில் அறிமுகம் செய்யப்படும் போது 6ஜிபி ரேம், 64ஜிபி மெமரி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 14,999, 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 15,999, 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 17,999 என்று அறிமுகம் செய்யப்பட்டன.
பின்னர், ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்ந்தது. இதனால், ஸ்மார்ட்போன்களின் விலையும் அதிகரித்தது. அதன்படி, 6ஜிபி ரேம், 64ஜிபி மெமரி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 15,999, 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 16,999, 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 18,999 என்று விலை அதிகரித்தது.
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
திரை அளவு: 6.53 இன்ச்
பிராசசர்: மீடியாடெக் ஹூலியோ ஜி90 SoC
கேமரா:
பின்புறத்தில் 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா, 2MP அல்ட்ரா மேக்ரோ லென்ஸ், 2MP டெப்த் சென்சார் கேமரா உள்ளன. இதே போல், முன்பக்கத்தில் 20MP செல்ஃபி கேமரா உள்ளது.
மேலும், வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், ஐஆர் பிளாஸ்டர், யுஎஸ்பி டைப் சி, 4,500 mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜர் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
Is Redmi Note 9 the perfect successor to Redmi Note 8? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
WhatsApp May Launch a Guest Calls Feature, Allowing People Without an Account to Join Calls
Sony and Guerrilla Games Reportedly Working on a New Killzone Project