இந்தியாவில் Redmi 8-ன் ஆரம்ப விலை ரூ 7,999.
6.22-inch HD+ Dot Notch display-வுடன் வருகிறது Redmi 8
Redmi 8 இந்தியாவில் புதன்கிழமை (இன்று) அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜியோமி அறிமுகப்படுத்திய Redmi 7 க்கு அடுத்தபடியாக புதிய Redmi தொலைபேசி வருகிறது.
இந்தியாவில் Redmi 8-ன் விலை மற்றும் விற்பனை விவரங்கள்
இந்தியாவில் Redmi 8-ன் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜின் விலை 7,999 ரூபாயாகவும், அதன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜின் விலை 8,999 ரூபாயகவும் விலை குறிப்பிடப்பட்டுள்ளது. 3 ஜிபி ரேம் வேரியண்ட்டை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களும் 4 ஜிபி ரேம் வேரியண்டாக மேம்படுத்தப்படுவார்கள் என்று ஜியோமி இந்திய தலைவர் Manu Kumar Jain லைவ் ஸ்ட்ரீமின் போது அறிவித்தார்.
Redmi 8 இந்த வார தொடக்கத்தில் உக்ரேனில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தொலைபேசி 3 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜின் விலை UAH 3,999 (தோராயமாக ரூ. 11,500)-யாகவும், அதன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜின் விலை UAH 4,499 (தோராயமாக ரூ. 13,000)-யாகவும் விற்பனைக்கு வருகிறது.
Redmi 8-ல் Oynx Black, Ruby Red, Sapphire Blue மற்றும் Emerald Green colour மற்றும் splash-resistant P2i coating உள்ளது. இந்த தொலைபேசி அக்டோபர் 12 சனிக்கிழமை நள்ளிரவு முதல் விற்பனைக்கு வரும். மேலும், இது Mi.com, Mi Home stores மற்றும் Flipkart மூலம் விற்பனைக்கு கிடைக்கும்.
Redmi 8-ன் சிறப்பம்சங்கள்
Redmi 8 இரட்டை சிம் (நானோ), Android 9 Pie உடன் MIUI 10 இயங்குகிறது. Corning Gorilla Glass 5 பாதுகாப்புடன் 6.22-inch HD+ Dot Notch display அம்சத்தைக் கொண்டுள்ளது. 4 ஜிபி ரேம் வரை octa-core Qualcomm Snapdragon 439 SoC உடன் இணைக்கப்பட்டுள்ளது.
Redmi 8 இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் f/1.8 lens உடன் 12-megapixel Sony IMX363 primary sensor மற்றும் 2-megapixel depth sensor ஆகியவை அடங்கும். rear camera கேமரா அமைப்பில் உள்ள முதன்மை சென்சார் Mi Mix 2S மற்றும் Poco F1-ல் இடம்பெற்றதை ஒத்திருக்கிறது. preloaded AI Portrait மற்றும் AI Scene Detection ஆகிய அம்சங்கள் உள்ளன.
![]()
செல்ஃபிக்களுக்கு, முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா சென்சார் உள்ளது. Face Unlock உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு (AI) இயங்கும் அம்சங்களும் உள்ளன.
Redmi 8-ல் 64 ஜிபி வரை உள் சேமிப்பிடத்தை வழங்கியுள்ளது ஜியோமி. இது microSD card வழியாக (up to 512GB) ஒரு பிரத்யேக ஸ்லாட்டுடன் விரிவாக்கக்கூடியது. தொலைபேசியில் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi, GPS/ A-GPS, infrared, wireless FM radio, 3.5mm headphone jack மற்றும் USB Type-C port ஆகியவை அடங்கும். மேலும், தொலைபேசியின் பின்புறத்தில் fingerprint சென்சார் உள்ளது.
Redmi 8, 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது பல்வேறு AI மேம்படுத்தல்களுடன் செயல்படுகிறது. மேலும், 18W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இருப்பினும், retail box-ல் 10W சார்ஜர் உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Google Says Its Willow Chip Hit Major Quantum Computing Milestone, Solves Algorithm 13,000X Faster
Garmin Venu X1 With 2-Inch AMOLED Display, Up to Eight Days of Battery Life Launched in India