கூகுள் பிக்சல் 10a அறிமுகத்திற்கு முன்பாக, தற்போதைய மாடலான பிக்சல் 9a விலையில் 11,000 ரூபாய்க்கும் மேல் குறைக்கப்பட்டுள்ளது.
Photo Credit: Google
பிக்சல் 10ஏ அறிமுகத்திற்கு முன்னதாக, கூகிள் பிக்சல் 9ஏ அமேசானில் ரூ.11,000க்கும் அதிகமான தள்ளுபடியைப் பெறுகிறது.
கூகுள் போன் அப்படின்னாலே ஒரு தனி கெத்துதான். அந்த 'கிளீன் ஆண்ட்ராய்டு' (Clean Android) எக்ஸ்பீரியன்ஸ்க்கும், அந்த மந்திரம் செய்யுற 'கேமரா'வுக்கும் நம்ம ஊர்ல ஏகப்பட்ட ஃபேன்ஸ் இருக்காங்க. ஆனா எப்பவும் பிக்சல் போன்களோட விலை கொஞ்சம் எட்டிப்பார்க்க முடியாத தூரத்துலதான் இருக்கும். ஆனா இப்போ ஒரு செம்ம ஜாக்பாட் அடிச்சிருக்கு. கூகுள் நிறுவனம் அவங்களோட அடுத்த பட்ஜெட் போன் ஆன Pixel 10a-வை பிப்ரவரி 18-ஆம் தேதி லான்ச் பண்ணப்போறாங்க. புது வரவு வர்றதுக்கு முன்னாடி, இப்போ இருக்குற Google Pixel 9a விலையை அதிரடியா குறைச்சிருக்காங்க. லான்ச் ஆனப்போ ₹49,999-க்கு விற்பனையான இந்த போன், இப்போ அமேசான் (Amazon) தளத்துல வெறும் ₹38,940-க்கு கிடைக்குது. அதாவது நேரடியா ₹11,000-க்கும் மேல டிஸ்கவுண்ட்.
இது மட்டும் இல்லாம, நீங்க பேங்க் ஆஃபர்ஸ் (SBI அல்லது ICICI கார்டுகள்) யூஸ் பண்ணி வாங்கினா இன்னும் ஒரு ₹1,500 வரைக்கும் குறைக்கலாம். பழைய போனை எக்ஸ்சேஞ்ச் பண்ணினா, உங்க கை காசை ரொம்பவே கம்மியா போட்டு இந்த போனை தூக்கிடலாம்.
இப்போ லேட்டஸ்ட் நியூஸ் படி பார்த்தா, பிப்ரவரி 18-ல பிக்சல் 10a லான்ச் ஆகப்போகுது. ஆனா ஒரு விஷயம் கவனிங்க, லீக் ஆன தகவல்படி 10a-ல பெரிய அளவுல மாற்றங்கள் இருக்காதுன்னு சொல்றாங்க. அதே Tensor G4 சிப்செட் தான் அதுலயும் வரும்னு ஒரு பேச்சு இருக்கு. அப்படின்னு பார்த்தா, இப்போ கம்மி விலையில கிடைக்கிற 9a-வை வாங்குறதுதான் ரொம்ப புத்திசாலித்தனமான விஷயம்.
நீங்க ஒரு ஐபோன் மாதிரி சிம்பிளா, ஆனா போட்டோஸ் சூப்பரா எடுக்குற ஒரு ஆண்ட்ராய்டு போன் தேடிட்டு இருக்கீங்கன்னா, உங்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் இதுதான். குறிப்பா இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுக்குறவங்களுக்கும், போட்டோகிராபி ஆர்வலர்களுக்கும் இந்த ₹38,000 பட்ஜெட்ல இதைவிட ஒரு நல்ல கேமரா போன் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்.
கடைசி வார்த்தை
ஆஃபர்ஸ் எப்பவும் "ஸ்டாக் இருக்குற வரைக்கும்" தான். அமேசான்ல இந்த பிரைஸ் டிராப் இப்போ லைவ்ல இருக்கு. 5100mAh பேட்டரி, 7 வருஷம் சாப்ட்வேர் அப்டேட்னு ஒரு முழுமையான பேக்கேஜா இந்த போன் இருக்கு. நீங்க பிக்சல் 10a-க்காக வெயிட் பண்ண போறீங்களா? இல்ல இப்போவே இந்த ₹11,000 டிஸ்கவுண்ட்டை யூஸ் பண்ணி 9a-வை வாங்க போறீங்களா? கமெண்ட்ல சொல்லுங்க மக்களே.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale