கடந்த ஆண்டு அறிமுகமான ரெட்மி 6 ஸ்மார்ட்போனின் தொடர்ச்சியாக சியோமி தனது புதிய தயாரிப்பான ரெட்மி 7 ஸ்மார்ட்போனை சீனாவில் இன்று அறிமுகம் செய்தது. இந்த புதிய பட்ஜட் தயாரிப்பு ஸ்மார்ட்போன் 9 பைய் மற்றும் MIUI 10 மென்பொருளை கொண்டு இயங்குகிறது.
ஆக்டா கோர் பிராசஸர், ஸ்னாப்டிராகன் 632 SoC, 4ஜிபி ரேம் மற்றும் 4,000mAh பேட்டரி வசதியுடன் இந்த ஸ்பார்ட்போன் வெளியாகியுள்ளது. இத்துடன் செயற்கை நுண்ணறிவு கொண்டு இணைக்கப்பட்ட 30 மென்பொருட்கள் இந்த தயாரிப்பின் சிறப்பம்சமாகும். இந்த பட்ஜெட் போன் அறிமுகத்துடன் ஸ்னாப்டிராகன் 675 SoC மற்றும் 48 மெகா பிக்சல் சோனி IMX5786 முதற்கட்ட சென்சாருடன் கூடிய ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.
ரெட்மி 7 விலை:
சீனாவில் முதற்கட்டமாக விற்பனை செய்யப்படவுள்ள ரெட்மி 7 போனின் 2ஜிபி ரேம்/ 16ஜிபி சேமிப்பு வசதி கொண்ட தயாரிப்பு ரூ.7,100க்கும், 3ஜிபி ரேம்/ 32ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மற்றொரு மாடல் ஸ்மார்ட்போன் ரூ.8,200க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது.
இதே தயாரிப்பில் மேம்படுத்தப்பட்ட வகையான 4ஜிபி ரேம்/ 64ஜிபி சேமிப்பு வசதி கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.10,200க்கு விற்பனை செய்யப்படும். இந்த மூன்று வகை மாடல்கள் கொண்ட ரெட்மி 7 டிரீம் ப்ளூ, சார்ம் நைட் ரெட் மற்றும் ப்ரைட் பிளாக் என்னும் மூன்று நிறங்களில் வெளியாகிறது.
மேலும் இந்த எல்லா மாடல்களுக்கும் கிரேடியன்ட் ஃபினிஷ் இருப்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 26 ஆம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் வெளியாக உள்ள நிலையில் இந்தியாவில் அறிமுக தேதி மற்றும் வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ரெட்மி 7 அமைப்புகள்:
இரண்டு நேனோ சிம் ஸ்லாட்களை கொண்டுள்ளது ரெட்மி 7. மேலே குறிப்பிட்டுள்ளது போல் 9 பைய் மற்றும் MIUI 10 மென்பொருளை கொண்டு இந்த போன் இயங்குகிறது. 6.36 இஞ்ச் ஹெச்டி திரை, ஆக்டா கோர் பிராசஸர், ஸ்னாப்டிராகன் 632 SoC, 2,3 மற்றும் 4ஜிபி ரேம் மற்றும் 4,000mAh பேட்டரி வசதியுடன் இந்த ஸ்பார்ட்போன் சந்தைக்கு வந்துள்ளது.
12 மற்றும் 2 மெகா பிக்சல் சென்சார்கள் கொண்ட இரண்டு பின்புற கேமராக்கள் இந்த போனில் இடம்பெற்றுள்ள நிலையில் சிறந்த செல்ஃபிகளுக்காக 8 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவும் இடம் பெற்றுள்ளது. இத்துடன் செயற்கை நுண்ணறிவு கொண்டு இணைக்கப்பட்ட 30 மென்பொருட்கள் முகத்தை வைத்து போனை அன்லாக் செய்யும் சென்சார், ஸ்மார்ட் பியுட்டி ஆப்ஸ் போன்ற பல முக்கிய அம்சங்கள் ரெட்மி 7-ல் இடம் பெற்றுள்ளன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்