6.51-inch HD+ டிஸ்ப்ளேவுடன் Realme 5s அறிமுகமாகும் என்று பிளிப்கார்ட் தனது டீஸர் பக்கத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளது. புதிய Realme போன் இந்தியாவில் Realme X2 Pro-வுடன் அறிமுகமாகும். இது தற்போதுள்ள Realme 5-க்கு மேம்படுத்தலாகத் தோன்றுகிறது. Realme 5s-ன் அதிகாரப்பூர்வ ரெண்டர் அதன் waterdrop-style display notch-ஐக் காட்டுவது, டீஸர் பக்கத்தில் இடம்பெற்றது. ஸ்மார்ட்போன் பின்புறத்தில் diamond-cut finish உடன் வரும்.
Realme 5s-ன் டிஸ்பிளே விவரக்குறிப்புகளைக் காண்பிக்க டீஸர் பக்கத்தை பிளிப்கார்ட் புதுப்பித்துள்ளது. வரவிருக்கும் ஸ்மார்ட்போன் 6.51-inch HD+ டிஸ்பிளேவுடன் வரும் - இது Realme 5-ல் இடம்பெற்றுள்ள 6.5-inch HD+ டிஸ்பிளே போன்றது. புதிய Realme போனும், முந்தைய மாடலைப் போலவே, quad rear கேமரா அமைப்போடு வரும்.
இருப்பினும், 12-megapixel முதன்மை சென்சார் கொண்ட Realme 5-ஐப் போலல்லாமல், Realme 5s, 48-megapixel முதன்மை சென்சாருடன் வரும் என்று பிளிப்கார்ட் வெளியிட்ட டீஸர் பக்கத்தில் முன்பே காணப்பட்டது.
Realme 5s ஆனது 5,000mAh பேட்டரியுடன் வரும் என்பதையும் டீஸர் பக்கம் காட்டியது. மேலும், ஹேண்ட்செட் கடந்த காலத்தில் Realme 5 மற்றும் Realme 5 Pro-வில் நாம் கண்ட waterdrop-style display notch-ஐ தக்க வைத்துக் கொள்ளும். இந்த போனின் பின்புறத்தில் fingerprint சென்சார் இருக்கும்.
கடந்த மாதம், Realme 5s இந்தியா மற்றும் தாய்லாந்தில் மாதிரி எண் RMX1925 உடன் சான்றிதழ்களைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் கேமரா அமைப்பு Realme 5 Pro-வில் இடம்பெற்றதைப் போலவே இருக்கும் என்று சான்றிதழ்கள் பரிந்துரைத்தன - 48-megapixel முதன்மை சென்சார், wide-angle lens உடன் இரண்டாம் நிலை சென்சார், depth சென்சார் மற்றும் macro lens உடன் மூன்றாம் நிலை சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் Realme 5s வெளியீடு நவம்பர் 20 ஆம் தேதி Realme X2 Pro-வுடன் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு போன்களும் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மே ஆன்லைன் ஸ்டோர் மற்றும் நாட்டின் பல்வேறு ஆஃப்லைன் கடைகள் மூலம் வாங்குவதற்கு கிடைக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்