Realme 5 மற்றும் Realme 5s தங்கள் ஜனவரி அப்டேட்டுகளை பெறத் தொடங்கியுள்ளன. இது டிசம்பர் 2019 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பைக் கொண்டுவருகிறது. இரண்டு போன்களுக்கான அப்டேட்டில் சில பிழைத் திருத்தங்கள் உள்ளன மற்றும் ஒட்டுமொத்த செயல்திறனையும் மேம்படுத்துகின்றன. உங்களுக்கு அறிவிக்கப்பட்டவுடன் அப்டேட்டுகளை இன்ஸ்டல் செய்ய பரிந்துரைக்கிறோம். சமீபத்திய Realme 5 மற்றும் Realme 5s அப்டேட்டுக்கான பதிப்பு எண் RMX1911EX_11_A.23. Realme 5 போன் கடந்த ஆண்டு ஆகஸ்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதே நேரத்தில், இரண்டு மாதங்களுக்குப் பிறகு நவம்பர் மாதத்தில் Realme 5s அறிமுகப்படுத்தப்பட்டது.
Realme 5 மற்றும் Realme 5s போன்களுக்கான அப்டேட்டுகளை அறிவிக்க, ரியல்மி மன்றங்களுக்கு அழைத்துச் சென்றது. குறிப்பிட்டுள்ளபடி, இந்த அப்டேட், டிசம்பர் 2019 பாதுகாப்பு இணைப்பைக் கொண்டுவருகிறது. அறியப்பட்ட சில பிழைகளை சரிசெய்கிறது. மேலும், கணினி stability-ஐ மேம்படுத்துகிறது. over-the-air (OTA) அப்டேட்டின் stability-ஐ உறுதிசெய்யும் வகையில் இந்த வெளியீடு அரங்கேற்றப்படும் என்று Realme குறிப்பிடுகிறது.
நிறுவனம் விளக்குகிறது, “OTA, இன்று ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனர்களிடம் தோராயமாக வெளியேற்றப்படும், மேலும் முக்கியமான பிழைகள் ஏதும் இல்லை என்பதை உறுதிசெய்த பின்னர், சில நாட்களில் பரந்த அளவில் வெளியிடப்படும். முக்கியமான பிழைகள் எதுவும் காணப்படவில்லை எனில், எதிர்வரும் நாட்களில் வெளியீடு முடிக்கப்படும். ”
உங்களுக்கு அறிவிப்பு கிடைக்கவில்லை எனில், Settings-ல் மேனுவலாக அப்டேட்டை சரிபார்த்து, நல்ல வைஃபை இணைப்பு வழியாகவும், போன் சார்ஜில் இருக்கும்போதும் இன்ஸ்டால் செய்யவும். Realme 5 மற்றும் Realme 5s பயனர்களுக்கான அப்டேட்டின் அளவு 2.55GB ஆகும். நிறுவனம் அதன் ஆதரவு பக்கத்தில் ஒரு கையேடு பதிவிறக்க இணைப்பையும் கிடைக்கச் செய்துள்ளது. பயனர்கள் அதை பதிவிறக்கம் செய்து எளிய முறை அல்லது மீட்பு பயன்முறையைப் பயன்படுத்தி இன்ஸ்டால் செய்யலாம். கீழேயுள்ள இணைப்பைப் பயன்படுத்தி, சமீபத்திய அப்டேட்டை மேனுவலாக பதிவிறக்கம் செய்யலாம்:
Realme 5 மற்றும் Realme 5s கிட்டத்தட்ட ஒரே மாதிரியான விவரக்குறிப்புகளைக் கொண்டுள்ளன. மேலும் இரண்டு போன்களுக்கும் இடையிலான மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், Realme 5s குவாட் ரியர் கேமரா அமைப்பில் 48 மெகாபிக்சல் முதன்மை snapper-ஐ உள்ளடக்கியது. அதே சமயம் Realme 5 ஒரு குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது 12 மெகாபிக்சல் முதன்மை கேமராவைப் பயன்படுத்துகிறது. Realme 5-ன் விலை ரூ. 8,999-யாகவும், Realme 5s-ன் விலை ரூ. 9,999-யாகவும் உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்