இந்தியாவில் Realme 5s-ன் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ. 9,999-ல் தொடங்குகிறது.
Realme 5s, HD+ டிஸ்பிளேவுடன் waterdrop-style notch வடிவமைப்பைக் கொண்டுள்ளது
Realme 5s இன்று இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Flipkart மற்றும் Realme.com மூலம் வாங்குவதற்கு கிடைக்கும். நினைவுகூர, Realme 5s கடந்த மாதம் Realme X2-வுடன் இணைந்து நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் Realme 5s-ன் விலை, விற்பனை விவரங்கள்:
Realme 5s-ன் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 9,999-யாகவும், அதன் 4GB RAM + 128GB ஸ்டோரேஜ் மாடல் ரூ. 10,999-யாகவும் விலையிடப்பட்டுள்ளது. இந்த போன் Crystal Blue, Crystal Purple மற்றும் Crystal Red வண்ண விருப்பங்களில் கிடைக்கும். மேலும், இதன் விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கும். Realme 5s, Flipkart மற்றும் அதிகாரப்பூர்வ Realme.com வழியாக வாங்குவதற்கு கிடைக்கும்.
Flipkart மூலம் Realme 5s வாங்கும் வாடிக்கையாளர்கள் HDFC வங்கி கார்டுகள் அல்லது EMI பரிவர்த்தனைகள் மூலம் 10 சதவீத உடனடி தள்ளுபடியைப் பெற தகுதியுடையவர்கள். இதேபோல், Realme.com வலைத்தளத்தின் மூலம் வாங்குவோர் ரூ. 1,000 மதிப்புள்ள 10 சதவீத மொபிக்விக் சூப்பர் கேஷைப் (MobiKwik SuperCash) பெற முடியும். no-cost EMI ஆப்ஷன்ஸ் மற்றும் எக்ஸ்சேஞ் தள்ளுபடிகள் உள்ளன. ரியல்மி, அதன் ஆன்லைன் ஸ்டோர் மூலம் ரூ. 7,000 மதிப்புள்ள ஜியோ பலன்களையும் வழங்குகிறது.
Realme 5s-ன் விவரக்குறிப்புகள்:
டூயல் சிம் (நானோ) Realme 5s, ColorOS 6 உடன் Android Pie-யால் இயங்குகிறது. இந்த போன் 89 percent screen-to-body ratio உடன் மற்றும் Corning Gorilla Glass 3+ protection ஆகியவற்றுடன் 6.5-inch HD+ (720 x 1600 pixels) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் 4GB RAM உடன் இணைக்கப்பட்டு octa-core Qualcomm Snapdragon 665 SoC-யால் இயக்கப்படுகிறது.
Realme 5s-ல் 128GB ஸ்டோரேஜ் உள்ளது. மேலும், அவை microSD card வழியாக (256GB வரை) விரிவாக்ககூடியது. போனின் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5.0, GPS/A-GPS, Beidou, Galileo மற்றும் Glonass ஆகியவை அடங்கும். இது 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டு வெளிவரும்.
Realme 5s, f/1.8 aperture உடன் 48-megapixel primary snapper-ஐ குவாட் ரியர் கேமரா அமைப்பில் உள்ளடக்கியுள்ளது. 119-degree (±1.5-degree) field of view மற்றும் f/2.25 aperture உடன் 8-megapixel wide-angle shooter, f/2.4 aperture உடன் 2-megapixel macro lens மற்றும் f/2.4 aperture உடன் 2-megapixel portrait கேமரா ஆகியவை உதவுகிறது. முன்பக்கத்தில், 13-megapixel selfie snapper உள்ளது. இது HDR, AI Beautification மற்றும் Time Lapse அம்சங்களை ஆதரிக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Meta Muse AI Agent Arrives on Mac With Support for Complex Tasks: What to Know
WhatsApp Could Bring New Theme Categories and Wallpapers to Android
Mivi One 5G Camera Details Revealed, Mivi Care+ Support Teased Ahead of Launch