இந்த போன் 4GB RAM உடன் இணைக்கப்பட்டு octa-core Qualcomm Snapdragon 665 SoC-யால் இயக்கப்படுகிறது. இதில் 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டு வெளிவரும்.
Realme 5s விற்பனை நள்ளிரவில் Flipkart மற்றும் Realme.com-ல் தொடங்கியது
இந்தியாவில், Realme 5s போன் இப்போது விற்பனையில் உள்ளது. போனை Flipkart வழியாக வாங்கலாம், அதேசமயம் மதியம் 12 மணிக்கு Realme.com அதை வழங்கத் தொடங்கும். Realme 5s கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் Realme 5s-ன் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 9,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அதன் 4GB RAM + 128GB ஸ்டோரேஜ் மாடல் ரூ. 10,999-யாக விலையிடப்பட்டுள்ளது. குறிப்பிட்டுள்ளபடி, Realme 5s இப்போது Flipkart வழியாக விற்பனைக்கு வந்துள்ளன, அதேசமயம் Realme.com-ல் மதியம் 12 மணிக்கு வாங்குவதற்கு கிடைக்கும். Crystal Blue, Crystal Purple மற்றும் Crystal Red ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் Realme 5s (Review) கிடைக்கும். ரூ. 7,000 மதிப்புள்ள ஜியோ பலன்கள் மற்றும் no-cost EMI ஆப்ஷன்களை Realme.com வழங்குகிறது.
பிளிப்கார்ட்டில், விற்பனை சலுகைகளில் no-cost EMI ஆப்ஷன்கள், ரூ. 10,800 வரை எக்ஸ்சேஞ் தள்ளுபடி, பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டில் 5 சதவீதம் கேஷ்பேக் மற்றும் ஆக்சிஸ் பேங்க் பஸ் கிரெடிட் கார்டுடன் 5 சதவீதம் கூடுதல் தள்ளுபடி ஆகியவை அடங்கும்.
டூயல் சிம் (நானோ) Realme 5s, ColorOS 6 உடன் Android Pie-யால் இயங்குகிறது. இந்த போன் 89 percent screen-to-body ratio உடன் மற்றும் Corning Gorilla Glass 3+ protection ஆகியவற்றுடன் 6.5-inch HD+ (720 x 1600 pixels) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் 4GB RAM உடன் இணைக்கப்பட்டு octa-core Qualcomm Snapdragon 665 SoC-யால் இயக்கப்படுகிறது.
Realme 5s-ல் 128GB ஸ்டோரேஜ் உள்ளது. மேலும், அவை microSD card வழியாக (256GB வரை) விரிவாக்ககூடியது. போனின் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5.0, GPS/A-GPS, Beidou, Galileo மற்றும் Glonass ஆகியவை அடங்கும். இதில் 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டு வெளிவரும்.
Realme 5s, f/1.8 aperture உடன் 48-megapixel primary snapper-ஐ குவாட் ரியர் கேமரா அமைப்பில் உள்ளடக்கியுள்ளது. 119-degree (±1.5-degree) field of view மற்றும் f/2.25 aperture உடன் 8-megapixel wide-angle shooter, f/2.4 aperture உடன் 2-megapixel macro lens மற்றும் f/2.4 aperture உடன் 2-megapixel portrait கேமரா ஆகியவை உதவுகிறது. முன்பக்கத்தில், 13-megapixel selfie snapper உள்ளது. இது HDR, AI Beautification மற்றும் Time Lapse அம்சங்களை ஆதரிக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy S25 Gets New Galaxy AI Features From Galaxy S26 With New One UI 8.5 Update
Ubisoft Shuts Down 2 More Studios, Lays Off Up to 380 Employees in Latest Round of Cost Cuts