6.51-Inch HD+ டிஸ்பிளேவுடன் வருகிறது Realme 5s!

6.51-Inch HD+ டிஸ்பிளேவுடன் வருகிறது Realme 5s!

Realme 5s, waterdrop-style display notch உடன் வரும்

ஹைலைட்ஸ்
  • Realme 5s ஆனது Realme 5-ஐப் போன்ற டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும்
  • Realme X2 Pro-வுடன் இணைந்து Realme 5s-ஐ Realme அறிமுகப்படுத்துகிறது
  • Realme போனில் 48-megapixel முதன்மை சென்சார் காணப்படுகிறது
விளம்பரம்

6.51-inch HD+ டிஸ்ப்ளேவுடன் Realme 5s அறிமுகமாகும் என்று பிளிப்கார்ட் தனது டீஸர் பக்கத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளது. புதிய Realme போன் இந்தியாவில் Realme X2 Pro-வுடன் அறிமுகமாகும். இது தற்போதுள்ள Realme 5-க்கு மேம்படுத்தலாகத் தோன்றுகிறது. Realme 5s-ன் அதிகாரப்பூர்வ ரெண்டர் அதன் waterdrop-style display notch-ஐக் காட்டுவது, டீஸர் பக்கத்தில் இடம்பெற்றது. ஸ்மார்ட்போன் பின்புறத்தில் diamond-cut finish உடன் வரும். 

Realme 5s-ன் டிஸ்பிளே விவரக்குறிப்புகளைக் காண்பிக்க டீஸர் பக்கத்தை பிளிப்கார்ட் புதுப்பித்துள்ளது. வரவிருக்கும் ஸ்மார்ட்போன் 6.51-inch HD+ டிஸ்பிளேவுடன் வரும் - இது Realme 5-ல் இடம்பெற்றுள்ள 6.5-inch HD+ டிஸ்பிளே போன்றது. புதிய Realme போனும், முந்தைய மாடலைப் போலவே, quad rear கேமரா அமைப்போடு வரும்.

இருப்பினும், 12-megapixel முதன்மை சென்சார் கொண்ட Realme 5-ஐப் போலல்லாமல், Realme 5s, 48-megapixel முதன்மை சென்சாருடன் வரும் என்று பிளிப்கார்ட் வெளியிட்ட டீஸர் பக்கத்தில் முன்பே காணப்பட்டது.

Realme 5s ஆனது 5,000mAh பேட்டரியுடன் வரும் என்பதையும் டீஸர் பக்கம் காட்டியது. மேலும், ஹேண்ட்செட் கடந்த காலத்தில் Realme 5 மற்றும் Realme 5 Pro-வில் நாம் கண்ட waterdrop-style display notch-ஐ தக்க வைத்துக் கொள்ளும். இந்த போனின் பின்புறத்தில் fingerprint சென்சார் இருக்கும்.

கடந்த மாதம், Realme 5s இந்தியா மற்றும் தாய்லாந்தில் மாதிரி எண் RMX1925 உடன் சான்றிதழ்களைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் கேமரா அமைப்பு Realme 5 Pro-வில் இடம்பெற்றதைப் போலவே இருக்கும் என்று சான்றிதழ்கள் பரிந்துரைத்தன - 48-megapixel முதன்மை சென்சார், wide-angle lens உடன் இரண்டாம் நிலை சென்சார், depth சென்சார் மற்றும் macro lens உடன் மூன்றாம் நிலை சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 

இந்தியாவில் Realme 5s வெளியீடு நவம்பர் 20 ஆம் தேதி Realme X2 Pro-வுடன் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு போன்களும் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மே ஆன்லைன் ஸ்டோர் மற்றும் நாட்டின் பல்வேறு ஆஃப்லைன் கடைகள் மூலம் வாங்குவதற்கு கிடைக்கும்.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good build quality, striking looks
  • Very good battery life
  • Cameras perform well in daylight
  • Dedicated microSD card slot
  • Bad
  • No fast charging
  • Cameras struggle in low light
  • A little heavy and bulky
Display 6.50-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android 9 Pie
Resolution 720x1600 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Realme 5s, Realme
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »