ரியல்மியின் சமீபத்திய AskMadhav எபிசோட் அதன் போன்களில் எதிர்பார்க்கப்படும் Wi-Fi அழைப்பு அம்சத்திற்கான ரோல்அவுட் காலவரிசையை வெளிப்படுத்துகிறது. தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத், VoWiFi அம்சத்தைப் பெறும் முதல் போனாக Realme X2 Pro இருக்கும் என்பதை உறுதிப்படுத்தினார். மேலும், இந்த மாதம் விரைவில் இந்த வெளியீடு தொடங்குவது உறுதி. ரியல்மியின் தயாரிப்பு போர்ட்ஃபோலியோவில் உள்ள மற்ற எல்லா போன்களுக்குமான அம்ச ரோல்அவுட் காலவரிசையையும் வீடியோ அறிவிக்கிறது. Realme U1 மற்றும் Realme 1 போன்ற பழைய போன்களும் இந்த காலாண்டின் இறுதிக்குள் அப்டேட்டை பெற உள்ளன.
VoWiFi அம்சம் எப்போது வெளியிடப்படும் என்று கேட்டதற்கு, இந்த மாதத்திலேயே இது தொடங்கும் என்று ஷெத் உறுதிப்படுத்தினார். Realme X2 Pro ஜனவரி மாதத்தில் அப்டேட்டை பெறும் முதல் போனாகும். அதைத் தொடர்ந்து Realme X2, Realme XT, Realme X, Realme 5 Pro, Realme 3 Pro, Realme 5, Realme 5s மற்றும் Realme 5i ஆகியவற்றிற்கு பிப்ரவரியில் கிடைக்கும். நிறுவனத்தின் மீதமுள்ள போன்கள் அதாவது, Realme 3, Realme 3i, Realme 2 Pro, Realme U1, Realme 1, Realme C2, Realme 2 மற்றும் Realme C1 ஆகியவை மார்ச் மாதத்திற்குள் அப்டேட்டை பெறும்.
பெயர் குறிப்பிடுவது போல் VoWFii அல்லது Voice over Wi-Fi வாடிக்கையாளர்களை Wi-Fi நெட்வொர்க்குகள் மூலம் வழக்கமான அழைப்பை மேற்கொள்ள அனுமதிக்கிறது. இந்த அம்சத்திற்கு தனி செயலி தேவையில்லை. மேலும், உங்கள் தொலைத் தொடர்பு ஆபரேட்டர் சேவையை வழங்குவதால், இணக்கமான போன்களில் பயன்படுத்தலாம். கடந்த மாதம் இந்த அம்சத்தை முதன்முதலில் ஏர்டெல் அறிமுகப்படுத்தியது. இது முதலில் டெல்லி என்.சி.ஆரில் மட்டுமே கிடைத்தது. பின்னர், மும்பை, கொல்கத்தா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு போன்ற நகரங்களுக்கும் இந்த அம்சத்தை கொண்டு வந்தது. இப்போது இது பான்-இந்தியா அடிப்படையில் கிடைக்கிறது. ஜியோ, இந்த மாத தொடக்கத்தில், VoWiFi அழைப்பு சேவையை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது. ஜியோ வைஃபை அழைப்பு சேவை 150-க்கும் மேற்பட்ட போன் மாடல்களால் ஆதரிக்கப்படுவதாக மும்பையைச் சேர்ந்த டெல்கோ கூறுகிறது.
Realme தனது முதல் உடற்பயிற்சி பேண்ட் அடுத்த மாதம் தொடங்கப்படும் என்றும், Realme 5i, ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டை மே மாதத்தில் பெறும் என்றும் அறிவித்தது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்