அட்டகாசமான அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது Poco X2...!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 4 பிப்ரவரி 2020 13:25 IST
ஹைலைட்ஸ்
  • Poco X2 பிப்ரவரி 11 முதல் இந்தியாவில் வாங்குவதற்கு கிடைக்கும்
  • இந்த ஸ்மார்ட்போன் Poco X1-ன் தொடர்ச்சி அல்ல
  • Poco X2, Qualcomm Snapdragon 730G SoC-யால் இயக்கப்படுகிறது

Poco X2, RealityFlow 120Hz டிஸ்ப்ளே பேனலுடன் மொபைல் கேமர்களை இலக்காகக் கொண்டுள்ளது

Poco X2 பல டீஸர்களுக்குப் பிறகு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Redmi K30 4G-யின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகத் தோன்றும் புதிய போகோ போன் பிப்ரவரி 11 முதல் நாட்டில் வாங்குவதற்குக் கிடைக்கும். 


இந்தியாவில் Poco X2-வின் விலை, வெளியீட்டு விவரங்கள்: 

இந்தியாவில் Poco F2-வின் அடிப்படை 6GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 15,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ. 16,999-யாக விலையிடப்படுள்ளது. மேலும், அதன் 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் மாடல் ரூ. 19,999 விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இந்த போன் Atlantis Blue, Matrix Purple மற்றும் Phoenix Red கலர் ஆப்ஷன்களில் Flipkart வழியாக விற்பனைக்கு வரும். அதன் முதல் விற்பனை பிப்ரவரி 11 செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணிக்கு நடைபெறும்.

Poco X2-வின் அறிமுக சலுகைகளில், ஐசிஐசிஐ வங்கி கார்டு அல்லது EMI பரிவர்த்தனைகளைத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1,000 உடனடி தள்ளுபடியும் அடங்கும்

Poco X2-வின் விவரக்குறிப்புகள், சிறப்பம்சங்கள்:


Poco X2, MIUI 11 உடன் Android 10-ல் இயங்குகிறது. இது 20:9 aspect ratio உடன் 6.67-inch full-HD+ (1080x2340 pixels) RealityFlow 120Hz டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த LCD டிஸ்பிளே பேனல் “Intelligent Dynamic Refresh Rate” தொழில்நுட்பத்துடன் வருகிறது. இது மேம்பட்ட முடிவுகளை வழங்க புதுப்பிப்பு வீதத்தை மாறும் வகையில் சரிசெய்கிறது என்று கூறப்படுகிறது. இந்த போன் Adreno 618 GPU மற்றும் 8GB of LPDDR4X RAM வரை இணைக்கப்பட்டு octa-core Qualcomm Snapdragon 730G SoC-யால் இயக்கப்படுகிறது.

Poco X2 குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது f/1.89 lens உடன் 64 மெகாபிக்சல் சோனி IMX686 முதன்மை சென்சார்  மற்றும் field-of-view (FoV) of 120 டிகிரி கொண்ட f/2.2 ultra-wide-angle lens உடன் 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கேமரா அமைப்பில், f/2.4 macro lens உடன் 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் ஆழம் சென்சார் உள்ளது. போனின் முன்புறத்தில் இரட்டை செல்பி கேமரா அமைப்பு உள்ளது. இது 20 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சாரைக் கொண்டுள்ளது.

Poco X2, பின்புறத்தில் நான்கு கேமரா சென்சாருடன் வருகிறது

Advertisement

VLOG மோட், 960fps ஸ்லோ-மோ வீடியோ ரெக்கார்டிங் மற்றும் பின்புற கேமரா அமைப்பிற்கான 4K வீடியோ பிடிப்பு போன்ற அம்சங்களை போகோ வழங்கியுள்ளது. மறுபுறம், செல்பி கேமரா அமைப்பு, Panorama Selfie Mode, AI Face Distortion Correction, AI Beautify, AI Portrait Mode மற்றும் Movie Movie ஆகியவற்றை ஆதரிக்கிறது.

Poco X2, 256GB UFS 2.1 ஸ்டோரேஜுடன் வருகிறது. இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth, GPS/ A-GPS, USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போன் side-mounted fingerprint சென்சார் மற்றும் IR blaster உடன் வருகிறது. தவிர, இந்த போன் 27W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 68 நிமிடங்களில் 100 சதவீத சார்ஜை வழங்கும் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, 27W சார்ஜர் போனுடன் தொகுக்கப்பட்டுள்ளது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Strong specifications at attractive prices
  • Good overall performance and battery life
  • Still photos in the daytime look very good
  • Bad
  • Large and bulky
  • Ads and bloatware in the UI
  • Poor low-light video quality
 
KEY SPECS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 730G
Front Camera 20-megapixel + 2-megapixel
Rear Camera 64-megapixel + 2-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4500mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Poco X2 price in India, Poco X2 specifications, Poco X2, Poco India, Poco
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. உங்க WhatsApp அக்கவுண்ட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு! Strict Account Settings மோட் பற்றி தெரிஞ்சுக்கோங்க
  2. Moto G67 Power 5G: 7000mAh Battery & Snapdragon 7s Gen 2 உடன் இந்தியாவில் அறிமுகம்!
  3. Motorola Edge 70: 5.99mm Slim Profile, Snapdragon 7 Gen 4 உடன் அறிமுகம்
  4. OnePlus Ace 6 Pro Max: 16GB RAM, 8000mAh Battery உடன் விரைவில் அறிமுகம்
  5. Lava Agni 4: 7000mAh Battery & Aluminium Frame உடன் நவம்பர் 20-ல் அறிமுகம்
  6. 7000mAh பேட்டரி, 45W சார்ஜிங்! பட்ஜெட் செக்மெண்ட்ல Realme C85-ன் அதிரடி
  7. Vivo Y19s 5G: 6000mAh Battery & Dimensity 6300 உடன் இந்தியாவில் அறிமுகம்
  8. Oppo Reno 15, Pro, Mini: 200MP கேமரா & Dimensity 8450 உடன் டிசம்பரில் அறிமுகம்
  9. ஃப்ளாக்ஷிப் கில்லர் Poco திரும்பி வந்துட்டான்! F8 Ultra மற்றும் Pro பற்றி வெளியான அதிரடி லீக்ஸ்
  10. Samsung-ன் அடுத்த மிரட்டல் A சீரிஸ் போன்! Galaxy A57 Test Server-ல Spotted
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.