போகோ எக்ஸ் 2, 120Hz டிஸ்பிளே வழங்கும் சந்தையில் மலிவான போனாகும்.
போகோ எக்ஸ் 2, பிப்ரவரி 4-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது
போகோ எக்ஸ் 2 பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் மலிவான போனாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன் பல ஃபிளாஷ் விற்பனை மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இப்போது, போகோ எக்ஸ் 2 மீண்டும் மார்ச் 17 செவ்வாய்க்கிழமை பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வர உள்ளது என்று நிறுவனம் தனது ட்விட்டரில் அறிவித்துள்ளது.
Capture natural colours with the #POCOX2. India's only phone to come with 64MP Sony IMX686 camera sensor.
— POCO India (@IndiaPOCO) March 12, 2020
RT if you love to see #PhotosClearAF.
Next sale on 17th March at 12 noon on @Flipkart. #SmoothAF pic.twitter.com/w1BvhnaDIs
Poco X2-வின் அடிப்படை 6 ஜிபி + 64 ஜிபி வேரியண்டின் விலை ரூ.15,999-யாகவும், 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.16,999-யாகவும், அதன் டாப்-எண்ட் 8 ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.19,999-யாகவும் உள்ளது.
Poco எக்ஸ் 2-வின் விற்பனை மார்ச் 17-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கும். இந்த போன் Flipkart-ல் வாங்க மட்டுமே கிடைக்கும், மேலும், Pheonix Red, Atlantis Blue மற்றும் Matrix Purple ஆகிய மூன்று வண்ணங்களும் விற்பனையில் கிடைக்கும். பிளிப்கார்ட்டில், ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ரூ.1,000 தள்ளுபடியைப் பெறலாம்.
போகோ எக்ஸ் 2 ஒரு சூப்பர் ஹை 120Hz புதுப்பிப்பு வீதத்தை வழங்கும் சந்தையில் மலிவான போனாகும். இதன் டிஸ்பிளே 1,080x2,400 பிக்சல்கள் தெளிவுதிறன் கொண்ட ஐபிஎஸ் எல்சிடி எஃப்எச்.டி + பேனல் ஆகும். போகோ எக்ஸ் 2 Qualcomm's ஸ்னாப்டிராகன் 730G SoC-யால் இயக்கப்படுகிறது, இது 6 ஜிபி அல்லது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை ஆன்போர்டு ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.
போகோ எக்ஸ் 2, Android 10-ஐ அடிப்படையாகக் கொண்ட போகோவிற்காக வடிவமைக்கப்பட்ட MIUI 11-ல் இயங்குகிறது. இந்த போன், 27W ஃபாஸ்ட் சார்ஜருடன் 4,500 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது.
இந்த போன், 64 மெகாபிக்சல் பிரைமரி ஷூட்டர், 8 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவற்றுடன் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது ஹோல்-பஞ்ச் டிஸ்பிளேவுக்குள் இரட்டை முன் கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது - 20 மெகாபிக்சல் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் ஷூட்டர்.
Is Realme 6 the Redmi Note 8 Pro killer India has been waiting for? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
WhatsApp May Launch a Guest Calls Feature, Allowing People Without an Account to Join Calls
Sony and Guerrilla Games Reportedly Working on a New Killzone Project