Photo Credit: Twitter/ Poco India
Poco X2 பிப்ரவரி தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் முறையாக விற்பனைக்கு வந்தது. இதுவரை, மொத்தம் மூன்று முறை விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் நிறுவனம் இப்போது நான்காவது விற்பனை மார்ச் 3-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது. முந்தைய விற்பனையுடன் ஒப்பிடும்போது நாளை விற்பனையானது "ஒப்பீட்டளவில் பெரிய பங்கு"-ஐக் கொண்டிருக்கும், இது அதன் "மிகப்பெரிய விற்பனையாக" மாறும். மார்ச் 3 விற்பனை, 'ஹெட் ஃபார் ரெட்' விற்பனை என அழைக்கப்படுகிறது. Poco X2-வின் பீனிக்ஸ் ரெட் வேரியண்டை மட்டுமே விற்பனை செய்யும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
Poco X2-வின் அடிப்படை 6 ஜிபி ரேம் / 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.15,999-ல் இருந்து தொடங்குகிறது மற்றும் அதன் 6 ஜிபி ரேம் / 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.16,999 ரூபாயும், இறுதியாக அதன் டாப்-ஸ்பெக் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.19,999-யாகவும் உள்ளது.
மார்ச் 3, செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணிக்கு Poco X2 ஃபிளாஷ் விற்பனையை அறிவிக்கும் போது, இந்த விற்பனையில் இன்னும் மிகப்பெரிய இருப்புகள் இருக்கும் என்றும் நிறுவனம் கூறியதுடன், ஐசிஐசிஐ கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.1,000 மதிப்புள்ள தள்ளுபடியை அறிவித்துள்ளது. இது பிளிப்கார்ட் வழியாக (via Flipkart) வாங்குவதற்கு கிடைக்கும்.
PocoX2, 120Hz IPS LCD டிஸ்பிளே (வகுப்பில் முதல்), டூயல் பஞ்ச்-ஹோல் முன் கேமரா மற்றும் ஹூட்டின் கீழ் ஒரு ஸ்னாப்டிராகன் 730G சிப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது, 27W ஃபாஸ்ட் சார்ஜருடன் 4,500 எம்ஏஎச் பேட்டரி வருகிறது.
இது பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்புடன், 64 மெகாபிக்சல் முதன்மை ஷூட்டர், 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சாரைக் கொண்டுள்ளது. Poco X2 Android 10-ஐ அடிப்படையாகக் கொண்டு போகோவிற்காக வடிவமைக்கப்பட்ட MIUI 11-ல் இயங்குகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்