அட்டகாசமான அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது Poco X2...!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
அட்டகாசமான அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது Poco X2...!

Poco X2, RealityFlow 120Hz டிஸ்ப்ளே பேனலுடன் மொபைல் கேமர்களை இலக்காகக் கொண்டுள்ளது

ஹைலைட்ஸ்
  • Poco X2 பிப்ரவரி 11 முதல் இந்தியாவில் வாங்குவதற்கு கிடைக்கும்
  • இந்த ஸ்மார்ட்போன் Poco X1-ன் தொடர்ச்சி அல்ல
  • Poco X2, Qualcomm Snapdragon 730G SoC-யால் இயக்கப்படுகிறது

Poco X2 பல டீஸர்களுக்குப் பிறகு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Redmi K30 4G-யின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகத் தோன்றும் புதிய போகோ போன் பிப்ரவரி 11 முதல் நாட்டில் வாங்குவதற்குக் கிடைக்கும். 


இந்தியாவில் Poco X2-வின் விலை, வெளியீட்டு விவரங்கள்: 

இந்தியாவில் Poco F2-வின் அடிப்படை 6GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 15,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ. 16,999-யாக விலையிடப்படுள்ளது. மேலும், அதன் 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் மாடல் ரூ. 19,999 விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இந்த போன் Atlantis Blue, Matrix Purple மற்றும் Phoenix Red கலர் ஆப்ஷன்களில் Flipkart வழியாக விற்பனைக்கு வரும். அதன் முதல் விற்பனை பிப்ரவரி 11 செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணிக்கு நடைபெறும்.

Poco X2-வின் அறிமுக சலுகைகளில், ஐசிஐசிஐ வங்கி கார்டு அல்லது EMI பரிவர்த்தனைகளைத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1,000 உடனடி தள்ளுபடியும் அடங்கும்

Poco X2-வின் விவரக்குறிப்புகள், சிறப்பம்சங்கள்:


Poco X2, MIUI 11 உடன் Android 10-ல் இயங்குகிறது. இது 20:9 aspect ratio உடன் 6.67-inch full-HD+ (1080x2340 pixels) RealityFlow 120Hz டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த LCD டிஸ்பிளே பேனல் “Intelligent Dynamic Refresh Rate” தொழில்நுட்பத்துடன் வருகிறது. இது மேம்பட்ட முடிவுகளை வழங்க புதுப்பிப்பு வீதத்தை மாறும் வகையில் சரிசெய்கிறது என்று கூறப்படுகிறது. இந்த போன் Adreno 618 GPU மற்றும் 8GB of LPDDR4X RAM வரை இணைக்கப்பட்டு octa-core Qualcomm Snapdragon 730G SoC-யால் இயக்கப்படுகிறது.

Poco X2 குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது f/1.89 lens உடன் 64 மெகாபிக்சல் சோனி IMX686 முதன்மை சென்சார்  மற்றும் field-of-view (FoV) of 120 டிகிரி கொண்ட f/2.2 ultra-wide-angle lens உடன் 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கேமரா அமைப்பில், f/2.4 macro lens உடன் 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் ஆழம் சென்சார் உள்ளது. போனின் முன்புறத்தில் இரட்டை செல்பி கேமரா அமைப்பு உள்ளது. இது 20 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சாரைக் கொண்டுள்ளது.

poco x2 image back gadgets 360 Poco X2

Poco X2, பின்புறத்தில் நான்கு கேமரா சென்சாருடன் வருகிறது

VLOG மோட், 960fps ஸ்லோ-மோ வீடியோ ரெக்கார்டிங் மற்றும் பின்புற கேமரா அமைப்பிற்கான 4K வீடியோ பிடிப்பு போன்ற அம்சங்களை போகோ வழங்கியுள்ளது. மறுபுறம், செல்பி கேமரா அமைப்பு, Panorama Selfie Mode, AI Face Distortion Correction, AI Beautify, AI Portrait Mode மற்றும் Movie Movie ஆகியவற்றை ஆதரிக்கிறது.

Poco X2, 256GB UFS 2.1 ஸ்டோரேஜுடன் வருகிறது. இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth, GPS/ A-GPS, USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போன் side-mounted fingerprint சென்சார் மற்றும் IR blaster உடன் வருகிறது. தவிர, இந்த போன் 27W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 68 நிமிடங்களில் 100 சதவீத சார்ஜை வழங்கும் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, 27W சார்ஜர் போனுடன் தொகுக்கப்பட்டுள்ளது.

  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Strong specifications at attractive prices
  • Good overall performance and battery life
  • Still photos in the daytime look very good
  • Bad
  • Large and bulky
  • Ads and bloatware in the UI
  • Poor low-light video quality
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 730G
Front Camera 20-megapixel + 2-megapixel
Rear Camera 64-megapixel + 2-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4500mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
  1. சாம்சங் கேலக்ஸி ஏ31 விலை அதிரடி குறைப்பு! சிறப்பு சலுகைகள் அறிமுகம்
  2. மோட்டோரோலா எட்ஜ் லைட்டாக அறிமுகமானது தற்போது, மோட்டோ ஜி 5ஜி ஆக அறிமுகம்!
  3. பேஸ்புக் யூசர்களின் பாஸ்வேர்டு திருட்டு! 25 ஆப்களை அதிரடியாக நீக்கியது கூகுள் ப்ளே ஸ்டோர்
  4. விரைவில் இந்தியாவில் வெளிவருகிறது விவோ x50 சீரிஸ்!
  5. சீனாவின் முக்கிய இரு நிறுவனங்களுக்கு தடை விதித்த அமெரிக்கா! காரணம் என்ன?!
  6. 8 ஜி.பி. ரேமில் ஹானரின் அட்டகாசமான மொபைல்! 5,000 ஆம்ப் பேட்டரி பவருடன்...
  7. யூசி பிரவுசருக்கு தடை: மாற்றாக 5 இந்திய பிரவுசர்களை நீங்கள் பயன்படுத்தலாம்!
  8. 3 ஜி.பி. ரேமுடன் பட்ஜெட் போனை வெளியிட்ட எல்.ஜி.! வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெறுமா?
  9. டூயல் ரியல் கேமராவுடன் ரியல்மி c11 பட்ஜெட் ஸ்மார்ட்போன்!
  10. இந்தியாவில் விற்பனையில் ’ஃபாசில் சோலார் வாட்ச்’! - விலை எவ்வளவு தெரியுமா?
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com