பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட Poco எக்ஸ் 2, பிளிப்கார்ட்டில் இன்று மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது. மார்ச் 3-ஆம் தேதி கடைசியாக விற்பனை செய்யப்பட்ட பின்னர், இது Pheonix Redட் கலர் வேரியண்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மார்ச் 3 விற்பனை ஸ்மார்ட்போனுக்கான நிறுவனத்தின் மிகப்பெரிய விற்பனை என்று கூறப்பட்டது, அங்கு போகோ தனது முந்தைய விற்பனையை விட, பெரிய பங்குகளை விற்றதாகக் கூறியது. போகோ எக்ஸ் 2 பிப்ரவரி 4-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் முறையாக விற்பனைக்கு வந்தது.
It's time to make the right choice! #POCOX2 goes on sale tomorrow at 12 noon on @Flipkart. #SmoothAF pic.twitter.com/YGWxuwkwA7
— POCO India (@IndiaPOCO) March 9, 2020
Poco X2-வின் அடிப்படை 6 ஜிபி + 64 ஜிபி வேரியண்டின் விலை ரூ.15,999-யாகவும், 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.16,999-யாகவும், அதன் டாப்-எண்ட் 8 ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.19,999-யாகவும் உள்ளது. போக்கோ எக்ஸ் 2 வாடிக்கையாளர்கள் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,000 தள்ளுபடியைப் பெறலாம்.
போகோ எக்ஸ் 2-வின் விற்பனை மார்ச் 10 செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணிக்கு தொடங்கும். இந்த போன் Flipkart-ல் வாங்க மட்டுமே கிடைக்கும், கடைசி நேரத்தைப் போலல்லாமல், இந்த விற்பனை எந்த நிறத்திற்கும் பிரத்தியேகமாக இருக்காது, மேலும் மூன்று வண்ணங்களும் கிடைக்கும் . போகோ எக்ஸ் 2 Pheonix Red, Atlantis Blue மற்றும் Matrix Purple வண்ணங்களில் வருகிறது.
போகோ எக்ஸ் 2 ஒரு சூப்பர் ஹை 120Hz புதுப்பிப்பு வீதத்தை வழங்கும் சந்தையில் மலிவான போனாகும். இதன் டிஸ்பிளே 1,080x2,400 பிக்சல்கள் தெளிவுதிறன் கொண்ட ஐபிஎஸ் எல்சிடி எஃப்எச்.டி + பேனல் ஆகும். போகோ எக்ஸ் 2 Qualcomm-ன் ஸ்னாப்டிராகன் 730G SoC-யால் இயக்கப்படுகிறது, இது 6 ஜிபி அல்லது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை ஆன்போர்டு ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.
போகோ எக்ஸ் 2, Android 10-ஐ அடிப்படையாகக் கொண்ட போகோவிற்காக வடிவமைக்கப்பட்ட MIUI 11-ல் இயங்குகிறது. இந்த போன், 27W ஃபாஸ்ட் சார்ஜருடன் 4,500 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது, .
இந்த போன், 64 மெகாபிக்சல் பிரைமரி ஷூட்டர், 8 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவற்றுடன் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது ஹோல்-பஞ்ச் டிஸ்பிளேவுக்குள் இரட்டை முன் கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது - 20 மெகாபிக்சல் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் ஷூட்டர்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்