போகோ எக்ஸ் 2 இந்தியாவில் திறந்த விற்பனைக்கு வந்துள்ளது. இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில், எக்ஸ்சேஞ் தள்ளுபடி மற்றும் no-cost EMI ஆப்ஷன்கள் போன்ற சலுகைகளுடன் இந்த போன் 24x7 கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. போகோ எக்ஸ் 2 பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
Poco X2-வின் அனைத்து வகைகளும் Flipkart-ல் கிடைக்கின்றன. நிறுவனம், திறந்த விற்பனை அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டது. போக்கோ எக்ஸ் 2-வின் அடிப்படை 6 ஜிபி + 64 ஜிபி வேரியண்டின் விலை ரூ.15,999-யாகவும், 6 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ.16,999-யாகவும், டாப்-எண்ட் 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்டின் விலை ரூ.19,999-யாகவும் உள்ளது. இது அட்லாண்டிஸ் ப்ளூ, மேட்ரிக்ஸ் பர்பில் மற்றும் ஃபீனிக்ஸ் ரெட் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. பிளிப்கார்ட் no-cost EMI ஆப்ஷன்களையும், பழைய போன் எக்ஸ்சேஞ்-ல் ரூ.11,850-யும் வழங்குகிறது. ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், பிளிப்கார்ட்டில் ரூ.1,000 தள்ளுபடி பெறுவார்கள்.
டூயல்-சிம் (நானோ) போக்கோ எக்ஸ் 2, MIUI 11 உடன் Android 10-ல் இயக்குகிறது. இது 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.67 அங்குல முழு எச்டி + (1080 x 2400 பிக்சல்கள்) திரை மற்றும் 20: 9 என்ற விகிதத்தைக் கொண்டுள்ளது. போகோ எக்ஸ் 2 Qualcomm's ஸ்னாப்டிராகன் 730G SoC மற்றும் Adreno 618 GPU-வால் இயக்கப்படுகிறது. நீங்கள் 8GB வரை LPDDR4X RAM ரேம் பெறலாம்.
போக்கோ எக்ஸ் 2, 64 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி யுஎஃப்எஸ் 2.1 ஸ்டோரேஜில் வருகிறது. இணைப்பிற்காக, USB Type-C வழியாக இந்த போன் சார்ஜ் செய்யப்படுகிறது, Wi-Fi 802.11 a/b/g/n/ac support, Bluetooth v5.0, a 3.5mm headphone jack, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் ஐஆர் பிளாஸ்டர் ஆகியவை அடங்கும். போகோ எக்ஸ் 2-வில் உள்ள பேட்டரி திறன் 4,500 எம்ஏஎச் ஆகும், இது 27W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் உள்ளது. 68 நிமிடங்களில் போனை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. 27W சார்ஜர் சாதனத்துடன் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த போன் 165.3x76.6x8.79 மிமீ அளவு மற்றும் 208 கிராம் எடையுடன் வருகிறது.
Is Poco X2 the new best phone under Rs. 20,000? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்