போகோ எக்ஸ் 2 இன்று மதியம் 12 மணிக்கு மீண்டும் விற்பனைக்கு வர உள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 730G SoC-யால் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், ஈ-சில்லறை வலைத்தளமான பிளிப்கார்ட்டில் பிரத்தியேகமாகக் கிடைக்கும்.
Thank you for the phenomenal response!#POCOX2's next sale will be on 25th Feb at 12 noon only on @Flipkart.
— POCO India (@IndiaPOCO) February 18, 2020
Add to wishlist now: https://t.co/X56aa4wnQZ #SmoothAF https://t.co/NBk8UrdcHK
இந்தியாவில் Poco X2-வின் அடிப்படை 6 ஜிபி + 64 ஜிபி வேரியண்டின் விலை ரூ.15,999 ஆகும். இதன் 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ. 16,999 ஆகவும், ஸ்மார்ட்போனின் டாப் வேரியண்டிட் 8 ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜ் ரூ.19,999 விலை குறியீட்டுடன் வருகிறது. ஸ்மார்ட்போன் Atlantis Blue, Matrix Purple மற்றும் Phoenix Red ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்களில் வழங்கப்படும்.
இன்றைய விற்பனையின் போது, வாடிக்கையாளர்கள், ஐசிஐசிஐ வங்கி கார்டு அல்லது EMI பரிவர்த்தனைகளைத் தேர்ந்தெடுக்கும்போது உடனடி தள்ளுபடியாக ரூ.1,000 பெறுவார்கள். ஆக்சிஸ் வங்கி பஸ் கிரெடிட் கார்டு உள்ள வாடிக்கையாளர்கள் கூடுதல் 5 சதவீத தள்ளுபடியைப் பெறலாம்.
டூயல்-சிம் (நானோ) போக்கோ எக்ஸ் 2 ஆண்ட்ராய்டு 10-ல் இயக்குகிறது மற்றும் இது ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730G SoC-யால் இயக்கப்படுகிறது, அதோடு அட்ரினோ 618 GPU மற்றும் 8 ஜிபி வரை LPDDR4X ரேம் உள்ளது. ஸ்மார்ட்போனில் 20 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் கொண்ட செல்ஃபிக்களுக்கான இரட்டை முன் கேமரா அமைப்பு உள்ளது. இது தவிர, இது 27W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரவுடன் 4,500 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 68 நிமிடங்களில் 100 சதவீத சார்ஜிங்கை வழங்கும் என்று கூறப்படுகிறது. இந்த 27W சார்ஜர் சாதனத்துடன் தொகுக்கப்பட்டுள்ளது.
போகோ எக்ஸ் 2, USB Type-C port, 3.5mm headphone jack, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் ஐஆர் பிளாஸ்டர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. போகோ எக்ஸ் 2 சமீபத்திய ஆண்ட்ராய்டு 11 அப்டேட்டைப் பெறும் என்பதை போகோ சமீபத்தில் உறுதிப்படுத்தியது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்