சீன ஸ்மார்ட்ஃபோன் நிறுவனமான ஓப்போ தனது அடுத்த மாடலான ஆர்17 மொபைலின் டீசரை ஒரு நிகழ்ச்சியில் வெளியிட்டுள்ளது. மார்ச்ச மாதம் ஆர் 15 மற்றும் ஆர் 15 டிரீம் மிரர் மாடல்களை அந்நிறுவனம் சீனாவில் விற்பனைக்கு கொண்டு வந்தது. அதன் பிறகு இந்த மாடலின் டீசர் இப்போது வெளியாகியுள்ளது.
ஆர்17 பற்றி ஒரு ஆச்சரியத் தகவல், அது 10ஜி.பி ரேம் கொண்ட் ஸ்மார்ஃபோன் என்பது. ஆனால் இது இன்னும் உறுதி செய்யப்படாத தகவலாகவே இருக்கிறது. மேலும், இந்த ஸ்மான்ட்ஃபோன் பற்றி வேறு எந்த தகவலும் தற்சமையம் வெளியிடப்படவில்லை.
வெய்போ என்ற சீன இணையதளத்தில், குமாட்டோ டெக்னாலஜி என்ற நிறுவனம் ஒரு நிகழ்ச்சியின் போது ஒரு புதிய ஸ்மான்ட்ஃபோனின் படத்தை வெளியிட்டது. அந்த நிகழ்ச்சி, ஓப்போ நிறுவனத்தால் ஸ்பான்சர் செய்யப்பட்டதும் கூட. ஆகவே ஆர்17 தான் டீசரில் வெளியிடப்பட்டது என்று கூறப்படுகிறது.
லீக்கான இந்த புகைப்படம் உண்மை என்றால், 10 ஜி.பி ரேம் கொண்ட முதல் ஸ்மார்ட்ஃபோனை உருவாக்குவது ஓப்போ தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இப்போதைக்கு 10 ஜி.பி ரேம் கொண்ட மொபைல் தேவையா என்ற கேள்வியும் எழுகிறது. விவோவின் எக்ஸ் பிளே 7 ஸ்மார்ட்ஃபோனும் 10ஜிபி ரேம் கொண்டதாக உருவாகிவருவதாக, உறுதிபடுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்