ஆக்டா-கோர் குவால்கம் ஸ்நாப்டிராகன் 710 SoCல் இயங்குகிறது. இதில் 8ஜிபி ரேம்/128ஜிபி உள்கட்ட சேமிப்பினைக் கொண்டுள்ளது. ஓப்போ ஆர்17 ப்ரோவானது பின்புறத்தில் இரு கேமராக்களைக் கொண்டுள்ளது
ஓப்போ ஆர்17 ப்ரோவின் இந்திய வேரியண்ட்டுகளில் விஓஓசி ஃபிளாஷ் சார்ஜ் உள்ளது.
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஓப்போ தங்களது நிறுவனத்தின் முதன்மை தயாரிப்பான ஓப்போ ஆர்17 ப்ரோவினை மும்பையில் வரும் டிசம்.4 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனானது சூப்பர் விஓஓசி ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் ஃபைண்ட் எக்ஸில் இல்லை. சூப்பர் விஓஓசி 10V/5A வேகமாக சார்ஜ் ஏறக்கூடிய தொழில்நுட்பத்தை பெற்றுள்ளது.
இதுகுறித்து திங்களன்று அறிவித்த பிபிகே சீன நிறுவனம் இறுதியாக சூப்பர் விஓஓசி தொழில்நுட்பமானது இந்திய சந்தைக்குள் அடியெடுத்து வைக்க உள்ளதாக தெரிவித்தது.
ஓப்போ ஆர் 17 ப்ரோவின் முக்கியம்சங்கள்:
ஓப்போ ஆர் 17 ப்ரோ கலர்OS 5.2ல் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவில் இயங்குகிறது. டூயல் சிம் கார்டுகளை பயன்படுத்தலாம். மேலும் 19:5:9 என்ற வீதத்திலான 6.4 இன்ச் ஹெச்டி திரையினைக் கொண்டுள்ளது.
ஆக்டா-கோர் குவால்கம் ஸ்நாப்டிராகன் 710 SoCல் இயங்குகிறது. இதில் 8ஜிபி ரேம்/128ஜிபி உள்கட்ட சேமிப்பினைக் கொண்டுள்ளது. ஓப்போ ஆர்17 ப்ரோவானது பின்புறத்தில் இரு கேமராக்களைக் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Oppo Find X9s, Oppo Find X9 Ultra, Oppo Find N6 Global Launch Timelines and Colourways Leaked