சீன தயாரிப்பு நிறுவனமான ஒப்போ அதன் தயாரிப்புகளில் ஒன்றான ஒப்போ ஆர்17ல் தொடர்ந்து புதிய ரக போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. சீனாவில் ஒப்போ ஆர்17 அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, ஜப்பானில் ஒப்போ ஆர்17 நியோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் முக்கியம்சம் உள்திரை ஃபிங்கர் பிரிண்ட் சென்சாராகும். இதனைத்தவிர, 6.4 இன்ச் திரையுடன் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர் உட்பட மேலும் பல உள்ளன. இதன் முந்தைய மாடல் உடன் ஒப்பிடும்போது பேட்டரி, ரேம் மற்றும் கேமிராவில் ஒரு சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. ஒப்போ ஆர்17ல் 3,6002mAh பேட்டரி, 4ஜிபி ரேம், இரட்டை கேமிரா வசதி உள்ளது அவை, 16 மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் சென்சார் கொண்டவை.
ஒப்போ ஆர்17 கடந்த ஆகஸ்ட் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் குறித்து பலமுறை தகவல் கசிந்தபின் ஒப்போ நிறுவனம் உள்திரை ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் 8ஜிபி ரேம் போன்ற அம்சங்கள் இருப்பதை உறுதி செய்தது. ஒப்போ ஆர்17 ப்ரோவில் டிரிபிள் கேமிரா மற்றும் விஓஓசி சார்ஜ் சப்போர்ட் வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒப்போ ஆர்17 நியோவின் அம்சங்கள் தற்போது சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஒப்போ கே1 உடன் ஒத்துப்போகும்.
ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஒப்போ ஆர்17ன் விலை இந்திய ரூபாய் மதிப்பின்படி 25,500 ஆகும். இதற்கு பல மாதத் தவணை முறைகளை இந்நிறுவனம் அளிக்கிறது. ஒப்போ ஜப்பானின் இணையதளத்தில் இதுகுறித்து வேறெந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை. சீனாவில் ஒப்போ ஆர்17 8ஜிபி ஏம்/ 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் போனின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.35,600 ஆகும். ஒப்போ ஆர்17 6ஜிபி ரேம்/ 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட போன் 32,600 ஆகும். மேலும் ஒப்போ ஆர்17 ப்ரோ சீனாவில் இந்திய ரூபாய் மதிப்பின்படி, 43,800 ஆகும்.
ஒப்போ ஆர்17 நியோவில் கலர்ஸ் 5.2வினை அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் திரையுடன் ஹெச்.டி AMOLED திரை உள்ளது. குவால்கம் ஸ்னாப்டிராகன் 660 ப்ராசஸரை கொண்டுள்ளது. இதில் 4ஜிபி ரேம் வேரியண்ட் உள்ளது.
ஒப்போ ஆர்17 நியோ, 16 மெகா பிக்சல் பிரைமரி சென்சார் மற்றும் 2 மெகா பிக்சல் செகண்டரி சென்சாரைப் பெற்றுள்ளது. ஒப்போ ஆர்17 நியோவின் ஸ்மார்ட்போனின் அளவுகள் 158.3x75.5x7.4mm மற்றும் எடை 156 கிராம் ஆகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்