இந்த மாதத்தின் தொடக்கத்தில் வெளியான ரெட்மி நோட் 6 ப்ரோ, ரெட்மி நோட் 5 ப்ரோவினுடைய வெற்றியின் அடையாளமாகும்
இந்தியாவில் ஓப்போ ஏ7 விலை ரூ.16,990 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சீன போன் தயாரிப்பு நிறுவனமான ஓப்போ இந்தியாவில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் ஓப்போ ஏ7னை அறிமுகப்படுத்தியுள்ளது. 19:9 என்ற வீதத்திலான திரை வாட்டர் டிராப் நாட்ச், பின்பக்கம் டூயல் கேமரா செட்டப்பினைக் கொண்டுள்ளது.
மலிவான விலையில் மனதிருப்தி தரக்கூடிய போனின் இடத்தினை ஓப்போ ஏ7 பெற்றுள்ளது.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் வெளியான ரெட்மி நோட் 6 ப்ரோ, ரெட்மி நோட் 5 ப்ரோவினுடைய வெற்றியின் அடையாளமாகும்.
இந்த மாதத்தில் விவோ ஒய்95 இந்தியாவில் அறிமுகமானது. அது, ஓய் சீரிஸில் வாட்டர் ட்ராப் நாட்ச் கொண்ட முதல் போன் விவோ ஒய்95 ஆகும். ஹூவாயின் துணை நிறுவனமான ஹானர் 8 எக்ஸின் ஆரம்ப விலை ரூ.15,000 ஆகும்.
ஓப்போ ஏ7 vs ரெட்மி நோட்6 ப்ரோ vs விவோ ஒய்95 vs ஹானர் 8 எக்ஸ்-ன் இந்திய விலை
இந்தியாவில் ஓப்போ ஏ7னின் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை ரூ. 16,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் கோல்டு மற்றும் நீல நிறங்களில் கிடைக்கிறது.
ஓப்போ ஏ7னினை பிளிப்கார்ட் மற்றும் அமேசான்.இன்-ல் வாங்கலாம். பிளிப்கார்ட் மற்றும் அமேசான் இந்தியாவில் எக்ஸ்சேன்ஜ் ஆஃபர்களை வழங்குகிறது.
ரெட்மி நோட்6 ப்ரோவில் 4ஜிபி ரேம்/64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ. 13,999 ஆகும். 6ஜிபி ரேம்/ மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை ரூ.15,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட், எம்.ஐ.காம் மற்றும் எம்.ஐ ஹோம் ஆஃப்லைன் ஸ்டோரில் விற்கப்பட்டது.
இந்த ஸ்மார்ட்போனின் அடுத்த பிளாஷ் சேல் நவம்.28 ஆம் தேதி தொடங்குகிறது. ரெட், பிளாக், புளூ மற்றும் ரோஸ் கோல்ட் நிறங்களில் கிடைக்கின்றன.
இந்தியாவில் 4ஜிபி ரேம்/64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ ஒய்95 விலை ரூ. 16,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் அமேசான்.இன், பேடிஎம் மால், விவோ ஆன்லைன் இ-ஸ்டோர் மற்றும் முன்னணி செல்போன் விற்பனையாளர்களிடமும் கிடைக்கிறது. விவோ ஒய்95 நெபுலா பர்பிள் மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கிறது.
ஹானர் 8எக்ஸ் 4ஜிபி ரேம்/64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை ரூ. 14,999 ஆகும். 6ஜிபி ரேம்+64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ. 16,999 ஆகும். டாப் என்ட் வேரியண்ட் ஆன 6ஜிபி ரேம்/ 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை ரூ.18,999 ஆகும். இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, சிகப்பு, மற்றும் நீல நிறங்களில் கிடைக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
CD Projekt Sells DRM-Free PC Games Storefront GOG to Its Co-Founder for $25.2 Million
Realme Neo 8 Infinite Edition Launch Timeline, Retail Box Leaked: Expected Specifications, Features
Samsung Galaxy S26 Series Could Support Satellite Voice, Video Calls With Samsung's New Exynos Modem 5410
Amazon Get Fit Days Sale 2026 Announced in India: Check Out Some of the Best Deals