Android 10 அப்டேட் பெறும் Motorola One Vision!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 9 ஜனவரி 2020 16:30 IST
ஹைலைட்ஸ்
  • இந்த அப்டேட் system-wide dark mode, smart reply அம்சங்களை கொண்டுவருகிறத
  • Motorola One Vision சமீபத்திய அப்டேட் ஜனவரி 2020 பேட்சையும் தருகிறது
  • ஆண்ட்ராய்டு 10 அப்டேட், ஒவ்வோரு தொகுப்பாக வெளிவருவதாக கூறப்படுகிறது

Motorola One Vision கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது

Motorola One Vision சமீபத்திய ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டை பெறத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அப்டேட் இப்போது பிரேசிலில் வெளிவருகிறது. நிறுவனம் நவம்பர் முதல் Motorola One Vision-ல் அப்டேட்டை சோதனை செய்து வருகிறது. பல மாதங்கள் அதை சோதித்தபின், இறுதியாக ஒரு நிலையான அப்டேட் வெளிவருகிறது.  Motorola One Vision போனின் இந்த சமீபத்திய ஆண்ட்ராய்டு 10 மென்பொருள் அப்டேட் ஜனவரி 2020 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பையும் கொண்டு வருகிறது.

Motorola One Vision ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டைப் பெறுவதாக பிரேசிலிலிருந்து ஒரு பயனர் லெனோவா மன்றங்களில் பதிவிட்டுள்ளார். சமீபத்திய அப்டேட்டின் பதிப்பு எண் QSA30.62-24-ஐக் கொண்டுள்ளது. மேலும், அதன் அளவு பிராந்தியத்திற்கு ஏற்ப மாறுபடும். ஒரு சில பயனர்களுக்கு மட்டுமே இப்போது அப்டேட் கிடைத்துள்ளதாகவும், இந்த அப்டேட் ஒவ்வொரு தொகுப்பாக வெளிவருவதாகவும் பயனர் கூறுகிறார். நிறுவனத்தின் முடிவில் இருந்து, இது குறித்து எந்த உறுதிப்படுத்தலும் இல்லை. ஆனால், போனில் அப்டேட்டின் வருகையைக் காட்டும் ஸ்கிரீன் ஷாட்டை, பயனர் இணைத்துள்ளார். குறிப்பிட்டுள்ளபடி, இப்போதே பிரேசிலில் இந்த வெளியீடு தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. வெளியீட்டை உறுதிப்படுத்த நாங்கள் Motorola-வை அணுகியுள்ளேம், மீண்டும் அறிவிப்பு வந்தவுடன் இந்த இடத்தை புதுப்பிப்போம்.

உங்களுக்கு இன்னும் அறிவிப்பு கிடைக்கவில்லை எனில், Settings-க்கு சென்று அதை மேனுவலாக சரிபார்க்கவும். இந்த அப்டேட் ஒவ்வொரு தொகுதிகளாக வெளிவருவதாகக் கூறப்படுவதால், அது உங்கள் போனுக்கு வருவதற்கு சிறிது நேரம் எடுக்கலாம். இந்த அப்டேட்டை, வலுவான வைஃபை இணைப்பின் கீழ், போன் சார்ஜில் இருக்கும் போது இன்ஸ்டால் செய்ய பரிந்துரைக்கிறோம்.

ஆண்ட்ராய்டு 10 அப்டேட், dark mode, smart reply அதே போன்று gesture navigation போன்ற நல்ல அம்சங்களைக் கொண்டுவருகிறது. நினைவுகூர, Motorola One Vision கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் ஒரே 4GB + 128GB வேரியண்டின் விலை ரூ. 19,999 ஆகும். இது, 48-megapixel primary shooter உடன் டூயல் ரியர் கேமரா அமைப்பையும், முன்புறத்தில் hole-punch டிஸ்பிளேவையும் கொண்டுள்ளது. இந்த போன் octa-core Samsung Exynos 9609 SoC-யால் இயக்கப்படுகிறது. மேலும், இது 25-megapixel selfie shooter-ஐயும் கொண்டுள்ளது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Appealing design and good build quality
  • Dependable performance
  • Clean Android UI
  • Impressive night vision mode
  • Bad
  • Below-average battery life
  • Unimpressive display quality
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Samsung Exynos 9609
Front Camera 25-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 3500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2520 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Motorola One Vision, Motorola One Vision Update, Motorola, Android 10
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. அறிமுகமாகிறது Samsung Galaxy F36 5G: Flipkart-ல் உறுதி! இந்த வாரம் லான்ச் - விலை என்னவாக இருக்கும்?
  2. OnePlus 13 அப்டேட்: "Plus Mind" அம்சம் வந்துருச்சு! நினைவாற்றலை அதிகரிக்க புதிய AI வசதி
  3. அறிமுகமானது Vivo X200 FE: 90W ஃபாஸ்ட் சார்ஜிங், Zeiss கேமரா - ஜூலை 23 முதல் விற்பனை!
  4. அறிமுகமானது Vivo X Fold 5: Snapdragon 8 Gen 3 SoC, 6000mAh பேட்டரியுடன் - ஜூலை 30 முதல் விற்பனை!
  5. Samsung Unpacked 2025: Z Flip 7 வந்துருச்சு! ₹1.1 லட்சத்துல பெரிய கவர் ஸ்க்ரீன், வேகமான சிப்செட்
  6. அறிமுகமானது Samsung Galaxy Z Fold 7: 1TB ஸ்டோரேஜ், பிரம்மாண்ட டிஸ்ப்ளே - ஜூலை 12 வரை சிறப்பு ப்ரீ-ஆர்டர்!
  7. Amazon Prime Day 2025: Samsung Galaxy Buds 3 Pro-வுக்கு ₹9,000 தள்ளுபடி! வெறும் ₹10,999-க்கு வாங்க வாய்ப்பு!
  8. Amazon Prime Day 2025: iQOO போன்களுக்கு அதிரடி தள்ளுபடி! ₹52,999-க்கு iQOO 13
  9. அதிர்ச்சி! Vivo X Fold 5 விலை ₹1.5 லட்சம்! X200 FE-ல் 6500mAh பேட்டரி - லீக் தகவல்கள் இதோ!
  10. Apple-ன் அடுத்த மாஸ்டர்பீஸ்: iPhone 17 Pro Max-ல் பேட்டரி புரட்சி! நீண்ட நேரம் யூஸ் பண்ணலாமா?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.