Motorola One Vision ஸ்மார்ட்போன் 3,000 ரூபாய் தள்ளுபடியை பெற்று, 19,999 ரூபாய் என்ற அதன் அறிமுக விலையில் இருந்து 16,999 ரூபாய் என்ற விலைக்கு இந்த விற்பனையில் இடம்பெற்றுள்ளது.
Flipkart Mobiles Bonanza விற்பனை செப்டம்பர் 9 வரை நடைபெறவுள்ளது
பிளிப்கார்ட் நிறுவனம் ஸ்மார்ட்போன்களுக்கான மற்றொரு பிரத்யேக விற்பனையான 'Flipkart Mobiles Bonanza' சலுகை விற்பனையை இன்று நடத்தவுள்ளது. இந்த விற்பனை பிளிப்கார்ட் தளத்தில் இன்று துவங்கியது. மொத்தம் ஐந்து நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த விற்பனை செப்டம்பர் 9-ல் முடிவடையவுள்ளது. இந்த விற்பனையில் மோட்டோரோலா, ஓப்போ, ரெட்மி, ரியல்மீ என பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் சலுகைகளை பெற்றுள்ளது. முக்கிய கவணத்தை பெற்றுள்ள ஸ்மார்ட்போன்கள் வரிசையில் Oppo A3s, Redmi 6, Motorola One Vision, என பல ஸ்மார்ட்போன்கள் இடத்தை பிடித்துள்ளன. Redmi Note 7 Pro, Asus 6Z, Oppo F11 Pro, மற்றும் Vivo V15 Pro போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு கூடுதல் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த விற்பனையில் மொபைல்போன்களுக்கு வெறும் 99 ரூபாயில் முழு மொபைல் பாதுகாப்பு திட்டங்களையும் அறிவித்துள்ளது.
சமீபத்திய அறிமுகமான Vivo Z1 Pro ஸ்மார்ட்போனை முன்பே பணம் செலுத்தி பெற்றுக்கொண்டால் 1,000 ரூபாய் தள்ளுபடி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் 4GB RAM + 64GB சேமிப்பு வகை 14,990 ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல 6GB RAM + 64GB சேமிப்பு வகை 16,990 ரூபாய் விலையிலும் 6GB RAM + 128GB சேமிப்பு வகை 17,990 ரூபாய் விலையிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
பிளிப்கார்ட்டின் இந்த விற்பனையில் Oppo A3s ஸ்மார்ட்போன் 1,000 ரூபாய் தள்ளுபடியை பெற்றுள்ளது. அதன்படி, இந்த ஸ்மார்ட்போனின் அடிப்படை வகையான 2GB RAM + 16GB சேமிப்பு கொண்ட வகை 6,990 ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்லது. 3GB RAM + 32GB சேமிப்பை கொண்ட Oppo A3s ஸ்மார்ட்போன் 7,990 ரூபாய் என்ற விலையிலும், மற்றொரு வகையான 4GB RAM + 64GB சேமிப்பு வகை ஸ்மார்ட்போன் 9,990 ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் பிளிப்கார்ட் தளத்தில் ஊதா (Purple) மற்றும் சிவப்பு (Red) என்ற இரு வண்ணங்களில் கிடைக்கபெறும்.
இந்த விற்பனையில் Redmi 6 3GB RAM + 64GB சேமிப்பு வகை ஸ்மார்ட்போன் 6,999 ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை 2,000 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல Realme 2 Pro ஸ்மார்ட்போனும் 2,000 ரூபாய் விலை குறைக்கப்பட்டு, 4GB RAM + 64GB சேமிப்பு வகை 9,999 ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. கடைசி விலைக்குறைப்பில் இந்த ஸ்மார்ட்போன் 11,990 ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த Realme 2 Pro ஸ்மார்ட்போனின் 6GB RAM + 128GB சேமிப்பு மற்றும் 8GB RAM + 128GB சேமிப்பு என்ற மற்ற இரண்டு வகைகள் 11,999 ரூபாய் மற்றும் 13,999 ரூபாய் என்ற விலைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
ரியல்மீயின் மற்ற ஸ்மார்ட்போன்கள் பற்றி பார்க்கையில் Realme 3 ஸ்மார்ட்போன் 500 ரூபாய் தள்ளுபடியை பெற்றுள்ளது, Realme 3 Pro ஸ்மார்ட்போன் 1,000 ரூபாய் தள்ளுபடியை பெற்றுள்ளது. இதேபோல Nokia 8.1 ஸ்மார்ட்போனும் 1,000 தள்ளுபடியை பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கு 13500 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகைகளை வழங்கியுள்ளது.
Motorola One Vision ஸ்மார்ட்போன் 3,000 ரூபாய் தள்ளுபடியை பெற்று, 19,999 ரூபாய் என்ற அதன் அறிமுக விலையில் இருந்து 16,999 ரூபாய் என்ற விலைக்கு இந்த விற்பனையில் இடம்பெற்றுள்ளது. இதேபோல Honor 20 ஸ்மார்ட்போனும் 3,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்பட்டு 29,999 ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
தள்ளுபடிகள் மட்டுமின்றி இந்த Flipkart Mobiles Bonanza பல ஸ்மார்ட்போன்களுக்கு கூடுதல் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளையும் வழங்கவுள்ளது. அந்த பட்டியலில் சாம்சங் கேலக்சி ஏ தொடரில் (Samsung Galaxy A-series) உள்ள அனைத்து ஸ்மார்ட்போன்களும் 2,500 ரூபாய் வரை கூடுதல் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியை பெறவுள்ளது. அதேபோல Redmi Note 7 Pro, Asus 6Z, Oppo F11 Pro, Vivo V15 Pro, மற்றும் Oppo A7 போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு 3,000 ரூபாய் வரை கூடுதல் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி வழங்கப்படவுள்ளது.
இந்த விற்பனையில் HDFC கார்டுகளுக்கு 5 சதவிதம் கூடுதல் உடனடி தள்ளுபடி வழங்கப்படவுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Neutrino Detectors May Unlock the Search for Light Dark Matter, Physicists Say
Uranus and Neptune May Be Rocky Worlds Not Ice Giants, New Research Shows
Steal OTT Release Date: When and Where to Watch Sophie Turner Starrer Movie Online?
Murder Report (2025): A Dark Korean Crime Thriller Now Streaming on Prime Video